For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோட்டலாகும் ”தி கிரேட் ஸ்காட்லாந்து யார்டு” தலைமையகம்- வாங்கத் துடிக்கும் “லூலூ”!

Google Oneindia Tamil News

லண்டன்: உலக அளவில் குற்ற வழக்குகளை புலனாய்வு செய்வதில் கில்லாடியாக விளங்கிய ஸ்காட்லாந்து போலீசின் தலைமையகத்தை விலை கொடுத்து வாங்க இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், ஐக்கிய அரபு எமிரேட்சில் குடியிருப்பவருமான யூசுப் அலி தீவிரமாக முயன்று வருகிறார்.

வரலாற்று பூர்வமான கிரேட் ஸ்காட்லாந்து யார்டு' கட்டிடத்தில் இருந்து மத்திய லண்டனில் உள்ள "நியூ ஸ்காட்லாந்து யார்டு" என்ற புதிய தலைமையகத்திற்கு ஸ்காட்லாந்து யார்டு தலைமையகம் மாற்றப்பட்டது.

Lulu Group front-runner to buy original Scotland Yard premises in London

இதை தொடர்ந்து 1829 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட "கிரேட் ஸ்காட்லாந்து யார்டு" கட்டிடத்தை 5 நட்சத்திர ஓட்டலாக கட்ட முடிவு செய்யப்பட்டது.

முதலாம் உலகப் போர்:

முதலாம் உலக போருக்கான ராணுவ வீரர்களை தேர்வு செய்வதில் கிரேட் ஸ்காட்லாந்து யார்டு கட்டிடம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்:

இவ்வளவு சிறப்பு மிக்க இக்கட்டிடத்தை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்ற கால்லியர்டு குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

125 ஆண்டு குத்தகை:

கடந்த 2013 ஆம் ஆண்டு 125 ஆண்டு கால குத்தகைக்கு கிரேட் ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தை கால்லியார்டு குழுமம் பெற்றுள்ளது.

2016ல் முடிவடையும்:

அக்கட்டிடத்தை 235 ரூம்கள் கொண்ட பிரம்மாண்ட ஓட்டலாக மாற்றி கால்லியார்டு குழுமம் கட்டுமானம் செய்து வருகிறது. வரும் 2016 ஆம் ஆண்டு இந்த ஓட்டலின் கட்டிடப்பணிகள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லூலூ குழுமத்தின் விருப்பம்:

இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைய உள்ள நிலையில் இருப்பதால், 5 நட்சத்திர ஓட்டலை ஏலம் மூலம் விற்பனை செய்ய கால்லியார்டு குழுமம் முடிவு செய்துள்ளது. இந்த ஏலத்தில் பங்குபெற்று 5 நட்சத்திர ஓட்டலை தங்கள் வசமாக்கவேண்டும் என்று யூசுப் அலியின் நிறுவனமான லூலூ குழுமம் விரும்புகிறது.

100 பில்லியன் பவுண்ட் விலை:

100 பில்லியன் பவுண்ட் விலை கொடுத்து இந்த கிரேட் ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தில் உள்ள ஓட்டலை வாங்க லூலூ குழுமம் திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுதும் "லூலூ":

லூலூ குழுமம் மத்திய கிழக்கு நாடுகளில் உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்களையும், பல்வேறு நாடுகளில் ஹைப்பர் மார்க்கெட்டுகளையும் மற்றும் ஷாப்பிங் மால்களையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Abu Dhabi investors may soon be in control of not one but two of the former homes of London's Metropolitan Police Force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X