ரஷ்யா, பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. எரிமலை வெடித்து சிதறல்.. சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

பசிபிக் பெருங்கடலில் 11.7.கி.மீ ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடுமையான நிலநடுக்கம் இது என்பதால் சுனாமி அலைகள் எழுந்து பாதிப்பு உண்டாக்கும் நிலை உருவானது.

Magnitude 7.8 quake hits off Russia's Kamchatka

இதனையடுத்து, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சிறிய அளவிலாக அதிர்வுகள் தொடர்ந்து இருந்தன.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கிழக்கு பகுதியில் உள்ள எரிமலையும் வெடித்து சிதறியுள்ளது. கிளியூவெஸ்காய் என்று அழைக்கப்படும் எரிமலை வெடித்து சிதறியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் மக்களிடையே சுனாமி அச்சம் குறைந்திருந்தாலும், நிலநடுக்கத்தில் பாதிப்புகள் கடுமையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல் பெரு நாட்டின் தெற்கு கடற்பரப்பிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு ரிக்டரில் 6.4 அலகுகளாக பதிவாகி உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A powerful earthquake measuring a magnitude of 7.8 hit Kamchatka peninsula in Russia on Tuesday triggering threats of tsunami.
Please Wait while comments are loading...