தமிழர் கழுத்தை அறுப்பதாக சொன்ன கொலைகார சிங்கள ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி-சிறிசேனா திடீர் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஈழத் தமிழர்களை கொலை செய்வேன் என பகிரங்கமாக மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரி- வீடியோ

  லண்டன்: ஈழத் தமிழர் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவேன் என பகிரங்கமாக மிரட்டிய இலங்கை ராணுவ அதிகாரி பெர்னாண்டோவுக்கு மீண்டும் பணி வழங்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

  லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவை எதிர்த்து ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் பெர்னாண்டோ என்பவர் வெளியே வந்து ஈழத் தமிழர்களை பார்த்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவோம் என 3 முறை சைகையால் மிரட்டினார்.

  நாடு கடத்த கோரிக்கை

  நாடு கடத்த கோரிக்கை

  இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் ராணுவ அதிகாரி பெர்னாண்டோவை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்து எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

  திடீர் சஸ்பென்ட்

  திடீர் சஸ்பென்ட்

  இதையடுத்து பெர்னாண்டோ எந்த நிலையிலும் கைது செய்யப்படக் கூடும் என கூறப்பட்டது. இதனால் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் பெர்னாண்டோடை உடனே பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

  மீண்டும் பணி

  மீண்டும் பணி

  இந்நிலையில் ஒரு வீடியோவை வைத்து ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது இலங்கை ராணுவ தளபதி கேஸ் சேனநாயக்க கூறியிருந்தார். இந்நிலையில் பெர்னாண்டோவை மீண்டும் பணியில் சேர்க்க இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

  நியாயமாக நடக்காது இலங்கை

  நியாயமாக நடக்காது இலங்கை

  இது புதிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. போர்க் குற்றங்கள் தொடர்பான நம்பகமான வீடியோக்களை பொய் என கூசாமல் சொல்லுகிற இலங்கையிடம் இருந்து இதைத்தானே எதிர்பார்க்க முடியும்?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Srilankan President Maithripala Sirisena reovked the suspension of Sri Lankan military official.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற