கொளுத்தும் வெயில், அனல்காற்று: மலேசியாவில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
கோலாலம்பூர்: மலேசியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கேதா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை விடுமுறை அளிக்க கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மலேசியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. மலேசியாவில் வெயில் மண்டையை பிளக்கிறது. மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கம் வரை இப்படித் தான் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் கேதா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் அனல்காற்று தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. இதையடுத்து செவ்வாய் மற்றும் புதன்கிழமை கேதா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் 39 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால் புதன்கிழமைக்கு பிறகும் விடுமுறை அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மலேசியாக்காரர்கள் வெயிலை தாங்க முடியாமல் இருக்க ஐரோப்பாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளோ சூரிய வெப்பத்தை ரசித்து மகிழ்கிறார்கள்.
மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெல்ஜியத்தை சேர்ந்த டோலியன் லெஜூன் கூறுகையில்,
இந்த அளவுக்கு வெயில் எங்கள் ஊரில் இல்லை. அதனால் வெயிலை ரசித்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக உள்ளது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications