For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாயமான விமானத்தின் கதி என்ன?: முதல்கட்ட தகவலை இன்று வெளியிடுகிறது மலேசியா

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மாயமான விமானம் குறித்த முதல்கட்ட அறிக்கையை மலேசிய அரசு இன்று வெளியிடுகிறது.

மார்ச் 8ம்தேதி மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென மாயமானது. சுமார் இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் இன்று அச்சம்பவம் குறித்த முதல் அறிக்கையை வெளியிட உள்ளது மலேசிய அரசு.

Malaysia to release initial MH370 report

இத்தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹூசைன் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார். ஆனால் மேற்கொண்டு எந்த தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார்.

ஓய்வு பெற்ற மலேசிய ஏர் தலைமை மார்ஷல் அன்குஷ் ஹஸ்டன் இதுபற்றி கூறுகையில், மாயமான விமானம் இந்திய பெருங்கடலில்தான் விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரசின் அறிக்கையில் என்ன தகவல் இருக்கும் என்ற ஆர்வத்தில் உள்ளோம் என்றார்.

English summary
Malaysia will release a preliminary report on Thursday on the disappearance of flight MH370 nearly two months after it went missing, according to Defence Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X