உச்ச நீதிமன்றத்தை அவமதித்த மாலத்தீவு அரசை கண்டித்து சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாலே: மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமவமதித்த அரசை எதிர்த்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹுசைன் ராஷித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாலத்தீவில் உள்ள உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் அவர் 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

Maldives minister resigns to protest against Yameen government

அதிபரின் இந்த செயலை கண்டித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹுசைன் ராஷித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நாட்டின் உயர் அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காத அரசுடன் சேர்ந்து பணியாற்ற என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று ராஷித் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த பின் பதவியை ராஜினாமா செய்துள்ள முதல் நபர் ராஷித் தான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Maldives' state health minister Hussain Rasheed has resigned his post to protest against Yameen government that refused to enforce supreme court's order to free opposition leaders from prison.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற