For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மான்செஸ்டரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை- சுஷ்மா டுவிட்டரில் தகவல்

இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சியில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார

Google Oneindia Tamil News

மான்செஸ்டர்: இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வெடிகுண்டு ஒன்று வெடித்தது.

Manchester attack: No reports of Indian casualties, says SushmaSwaraj

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது தீவிரவாதிகள் இந்த திடீர் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 22 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீவிரவாத தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியின் அருகில் உள்ள விக்டோரியா ரயில் நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

English summary
No reports of Indian casualties have emerged from the Manchester Arena blast, claimed external affairs minister Sushma Swaraj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X