For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுத்தமா கண்ணே தெரியல.. விண்ணை முட்டிய புகை.. விடிகாலையில் திடீர் தீவிபத்து.. பரபர சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் மால் ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியான் புகழ்பெற்ற தம்மாமில் இன்று நடந்த தீ விபத்து, அந்த நகரையே உலுக்கி எடுத்து வருகிறது.

சவுதி அரேபியாவில் உள்ள தஹ்ரான் மால் வளாகத்தில் இன்று விடிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாகி உள்ளன.

கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமாகோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரம் தம்மாம்.. நீதி, நிர்வாக அமைப்புகள் உட்பட பல அரசு துறைகள் இந்த தலைநகரில்தான் அமைந்துள்ளன.

 கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகாணம்

அதேபோல, கிழக்கு மாகாணத்தின் மிகப் பெரிய தம்மாம்தான்.. அதைவிட முக்கியமாக, சவுதி எண்ணெய் தொழிற்துறையின் முக்கிய நிர்வாக மையமும் இதே தம்மாம்தான்.. இந்த தலைநகரை சுற்றியுள்ள தஹ்ரான் அல் கோபர் போன்ற பகுதிகள் எல்லாம் சேர்ந்துதான் தம்மாம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.. இவ்வளவு முக்கியத்துவம் தொழிற்துறை நகரில், ஏராளமான இந்தியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

 பரபரப்பு - கலக்கம்

பரபரப்பு - கலக்கம்

இந்நிலையில், இங்கு செயல்பட்டு வரும்"தஹ்ரன் மால் காம்ப்ளக்ஸ்" (Dharan mall complex) என்ற ஒரு புகழ்பெற்ற மாலில் திடீர் தீ ஏற்பட்டுள்ளது.. இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.. இதுகுறித்து தகவல் அறிந்ததுமே தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. தீ மளமளவென பரவி வருவதால், அந்த பகுதியில் பரபரப்பும், கலக்கமும் சூழ்ந்துள்ளது.. போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படக்கூடும் என்பதாலும், அந்த பகுதியில் உள்ள வணிவளாகங்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும், முன்னெச்சரிக்கையாக கடைகளை மூடப்பட்டுவிட்டன..

 காம்ப்ளஸ்க்

காம்ப்ளஸ்க்

கடைகள், கட்டிடங்களில் தங்கியிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.. இந்த தீ விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.. இதேபோல விபத்துக்கான காரணமும் உடனடியாக தெரியவில்லை. ஆனால், இந்த காம்ப்ளக்ஸில் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இன்சுலேட்டர்களினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது..

வீடியோ

வீடியோ

முழுமையாக தீயை அணைத்தபிறகே அனைத்து தகவலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த தீ விபத்து குறித்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அந்த வீடியோவில், விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.. அந்த பகுதி முழுக்க கண்ணே தெரியவில்லை.. புகைமூட்டம் கொழுந்துவிட்டு எரிவதை பார்த்தால், தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

English summary
massive fire breaks out at a mall in saudi-arabia and what happaned சவுதி அரேபியாவில் மால் ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X