For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி இருந்தா கமல் வேணாமா... இதோ வந்துருச்சு போட்டி பேஸ்புக்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ரஜினி என்றால் கமல்.. விஜய் என்றால் அஜீத்.. சிம்பு என்றால் தனுஷ்.. இப்படி போட்டி வரிசை இருந்தால்தான் அந்த சினிமா உலகமே கலகலப்பாக இருக்கிறது. அப்படி இருக்கையில் உலகம் முழுவதும் சக்கை போடு போடும் பேஸ்புக்குக்கும் இப்போது சூப்பரான போட்டி வந்துள்ளது. அதுதான் எல்லோ (Ello).

கடந்த ஒரு மாதமாகத்தான் இந்த எல்லோ இணைய உலகை வலம் வந்து கொண்டுள்ளது. ஆனால் இது பேஸ்புக்கை சீக்கிரமே ஓவர் டேக் செய்ய ஆரம்பித்து விடும் என இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

டெக்னிக்கல் குரூப்பினருக்கு மத்தியில்தான் இது தற்போது பிரபலமாக உள்ளது. ஆனால் விரைவில் இது சாமானியர்களின் சாம்ராஜ்ஜியமாக மாறும் என்கிறார்கள் இதைப் பயன்படுத்தி வருவோர்.

விளம்பரம் இல்லாத பேஸ்புக்...

விளம்பரமே இல்லாத பேஸ்புக் எப்படி இருக்கும். அப்படித்ததான் இருக்கும் இந்த எல்லோ. இதை உருவாக்கி உலா வர விட்டிருப்பவர் பால் பட்னிட்ஸ் என்பவர். இவர்தான் எல்லோவின் நிறுவனர்.

பேஸ்புக்கின் மாற்று...

இதுவும் ஒரு சமூக வலைதளம்தான். 6 வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. பேஸ்புக்கின் மாற்று என்று பலரும் இதை வர்ணிக்க ஆரம்பித்துள்ளனர். விளம்பரமே இல்லாததே இதன் மிகப் பெரிய பலமாக மாறியுள்ளது.

மனமிருந்தால் மார்க்கமுண்டு...

அது எப்படி விளம்பரமே இல்லாமல் ஒரு இணையதளத்தை நடத்த முடியும் என்று பலரும் பாலிடம் கேட்டனர். ஆனால் 47 வயதான பால் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. மாறாக, முடியும் என்று மட்டும் பதிலளித்தார்.இப்போது செய்தும் காட்டி விட்டார்.

ஓடி ஓடி உழைக்கிறார்...

வெர்மான்ட், நியூயார்க் என இரு நகரங்களுக்கிடையே ஓடி ஓடி உழைக்கிறார் இந்த உழைப்பாளி. இவர் ஒரு சைக்கிள் கடையும், பொம்மைக் கடையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதை... கவிதை...

சில படங்கள், சில எழுத்துக்கள், வெள்ளை நிற பின்னணியில் பார்க்க பளிச்சென இருக்கிறது எல்லோ. சுத்தமாக விளம்பரமே இல்லை. ஆர்ட் படம் போல காணப்படுகிறது. ஆனால் கவிதை போல மிளிர்கிறது.

கட்டி முடிக்கப்படாத வீடு...

திடீரென யாராவது இங்கு வந்து பார்த்தால்... அடடா கட்டி முடிக்காமல் உள்ள வீட்டுக்குள் வந்து விட்டோமோ என்றுதான் எண்ணத் தோன்றும். அப்படித்தான் இதன் லுக் இருக்கிறது. ஆனால் உலகெங்கும் உள்ள சமூக வலைதளங்களை ஆண்டு வருவது உண்மையில் விளம்பரதாரர்கள்தான். அதைத்தான் சொல்லாமல் சொல்கிறது எல்லோ.

கௌரவம்...

நீங்கள்தான் இதன் உண்மையான முதலாளி என்றும் எல்லோவின் வாடிக்கையாளர்களை அது கெளரவப்படுத்துகிறது.

இளமை... புதுமை....

ஒரு மணி நேரத்திற்கு 35,000 பேர் வரை இதில் சேர்ந்து வருகிறார்களாம். பேஸ்புக்கின் மாற்று என்ற பெயரை மட்டும் வைத்திருக்கலாம் உண்மையிலேயே புதுமையாக இருப்பதுதான் இதன் குறுகிய கால பிரபலத்திற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்

English summary
Budnitz founded Ello, a social network that launched about six weeks ago and pitches itself as an alternative to the world's largest social network. Its biggest selling point is the feature it doesn't have advertising.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X