For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெக்சிகோ: ரூ.30 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னன் கைது

Google Oneindia Tamil News

Mexico Arrests Suspected Leader Of Cartel That Moved 76 Tons Of Coke Into The U.S.
மெக்சிகோசிட்டி: தலைக்கு ரூ30 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மெக்சிகோவின் முக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக அதிகளவு போதைப்பொருள் அமெரிக்காவுக்கு கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலில் மெக்சிகோவை சேர்ந்த மார்டினாஸ் சான்ஷேஸ் என்பவன் முக்கியக் குற்றவாளியாக விளங்கினான்.

இவனது தலைமையில் பெரிய கூட்டமே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது. கடந்த 2000-2003 ஆண்டுகளுக்கு இடையே மட்டும் மார்டினாஸ் சுமார் 76 டன் போதைப்பொருட்களை அமெரிக்காவுக்கு கடத்தியதை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

எனவே இந்த கடத்தல் மன்னனை பிடித்து கொடுத்தாலோ அல்லது அவனைப் பற்றிய துப்பு கொடுத்தாலோ ரூ.30 கோடி பரிசு தருகிறோம் என அமெரிக்க போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்தக் கடத்தல் மன்னன் மார்டினாசை மெக்சிகோ போலீசார் சாதுர்யமாகச் செயல்பட்டு கைது செய்துள்ளனர்.

கடத்தல் மன்னன் கைது உளவுத்துறையின் பெரிய சாதனை என மெக்சிகோ உள்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.

English summary
Mexican officials say federal police have arrested a man suspected of leading a drug cartel that moved 76 tons of cocaine into the U.S. between 2000 and 2003.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X