நடமாடும் நீர்சுத்திகரிப்பு வாகனத்தில் இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து பயணித்த பிரதமர் மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுடன் நடமாடும் நீர் சுத்திகரிப்பு வாகனத்தில் இணைந்து பயணித்து பயன்பாடுகளை கேட்டறிந்தார்.

இந்திய வரலாற்றிலேயே இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதமர் நரேந்திர மோடிதான். பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஆதரித்து வந்ததால் இஸ்ரேலுக்கு இந்திய பிரதமர்கள் எவரும் சென்றதில்லை.

Modi's Drive With PM Netanyahu In Israel's Gal-Mobile

ஆனால் இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தின் போது ஓல்கா கடற்கரையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை பார்வையிட்டார்.

பின்னர் கால் மொபைல் எனப்படும் நடமாடும் நீர்சுத்திகரிப்பு வாகனத்தையும் பார்வையிட்டார். அத்துடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அந்த வாகனத்தில் சிறிது நேரம் பயணித்தார்.

இதைத் தொடர்ந்து ஓல்கா கடற்கரையில் கடல் நீர்சுத்தகரிப்பு தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை பிரதமர் மோடிக்கு விவரித்தார் நெதன்யாகு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PM Modi surveyed mobile water purifier technology at the Israeli's Gal-Mobile Water Filtration Plant.
Please Wait while comments are loading...