For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பப் பெயரை கெடுத்துவிட்டேன்: பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட ஐஎஸ் தீவிரவாதி இம்வாசி

By Siva
Google Oneindia Tamil News

பாக்தாத்: குடும்பப் பெயரை கெடுத்துவிட்டதற்காக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியான ஜிஹாதி ஜான் என்ற முகமது இம்வாசி தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளின் தலைகளை துண்டித்து அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்களில் முகமூடி அணிந்து பலரின் தலையை துண்டித்த ஆங்கிலம் பேசும் நபர் ஜிஹாதி ஜான் என்று அழைக்கப்படுகிறார். அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பட்டதாரி முகமது இம்வாசி என்று அண்மையில் அடையாளம் தெரிந்தது.

Mohammed Emwazi: 'Jihadi John' apologises for problems he caused family – but not for executing hostages

ஈராக்கைச் சேர்ந்த இம்வாசியின் பெற்றோர் கடந்த 1994ம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறியுள்ளனர். இங்கிலாந்துக்கு வந்தபோது இம்வாசிக்கு வயது ஆறு. ஜிஹாதி ஜான் இம்வாசி தான் என்பதை அறிந்த அவரது தந்தை ஜேசம் தனது மகனை தீவிரவாதி, நாய் என்று திட்டினார். பின்னர் இம்வாசி தான் ஜிஹாதி ஜான் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று அவர் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் இம்வாசி தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இம்வாசி தீவிரவாதி என்று தெரிந்த பிறகு அவரது பெற்றோர் தலைமறைவாக வாழ்கிறார்கள். சிரியாவில் இருந்து இம்வாசி மன்னிப்பு கடிதத்தை ஆள் மூலம் தனது பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தில், குடும்ப பெயரை கெடுத்ததற்காகவும், பெற்றோரை சங்கடப்பட வைத்தததற்காகவும் இம்வாசி மன்னிப்பு கேட்டுள்ளாரே தவிர தான் செய்த கொலைகளுக்காக அவர் வருந்தவில்லை.

English summary
Jihadi John(a) Mohammed Emwazi has appologised to his parents for the shame he has brought to them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X