ஜப்பானில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை, வெள்ளம்: 3 பேர் பலி
டோக்கியோ: ஜப்பானில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
ஜப்பானில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர், பலர் மாயமாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

ஜோசோ, ஒசாகி, நிக்கோ ஆகிய நகரங்களில் வீடுகள், வயல்கள் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளின் கூரைகள் மேல் அமர்ந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் வீட்டின் மேற்கூரைகளில் அமர்ந்திருக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர்.
ஜப்பானின் ஹோன்ஷு தீவில் இடாவ் புயல் வீசிய 48 மணிநேரத்தில் கனமழை பெய்யத் துவங்கியது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புகுஷிமா அணு உலையில் அணு உலைகளை குளிர்விக்க பயன்படும் நீர் சேமிக்கும் தளம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நீர் கடலில் கலந்து விட்டது என கூறப்படுகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications