For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களின் கரகோஷங்களுக்கு இடையே அதிபராக ஒபாமா கடைசி உரை

By Siva
Google Oneindia Tamil News

சிகாகோ: அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் பாரக் ஒபாமா அதிபராக தனது கடைசி உரையாற்றியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிகிறது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார்.

Mr. President Obama says goodbye in his farewell speech

இந்நிலையில் ஒபாமா மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் சிகாகோவில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

நான் சிறந்த அதிபாரக ஆகியுள்ளதில் மக்களுக்கு பெரும் பங்கு உள்ளது. மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும். மாற்றத்தை நோக்கிச் சென்ற என் பயணத்தில் இரண்டு அடி முன்னே எடுத்து வைத்தால் ஒரு அடி சறுக்கி பின்னே வந்ததை ஒப்புக் கொள்கிறேன்.

நான் அதிபராக பதவியேற்றபோது இருந்ததை விட அமெரிக்கா தற்போது மேலும் வலுவான நாடாக மாறியுள்ளது. அனைவருக்கும் பொருளாதார வாய்ப்பு உள்ளது என்பதை உணராமல் நமது ஜனநாயகம் செயல்பட முடியாது.

இனத்தால் நம் சமூகத்தில் பாகுபாடு இருந்து கொண்டு இருக்கிறது. தீவிரவாதம் நமது பாதுகாப்பை மட்டும் அல்ல ஜனநாயகத்தையும் சோதித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் எந்த தீவிரவாத அமைப்பும் நம் நாட்டில் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தவில்லை.

கடந்த சில வாரங்களாக எனக்கும், மிஷலுக்கும் வந்து குவியும் வாழ்த்துக்களால் நெகிழ்ச்சி அடைந்துள்ளோம். பொறுப்பை எந்த பிரச்சனையும் இன்றி ஒப்படைப்போம் என்பதை டிரம்புக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

English summary
Barack Obama has given his farewell speech and bid good bye to the people of the USA as a president.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X