சாலையோரம் திடீரென முளைத்த ஹிலாரி நிர்வாண சிலை.. ரணகளமாகும் அமெரிக்க தேர்தல் களம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹிலாரி கிளிண்டன் நிர்வாண உருவச் சிலையை நிறுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பவுலிங் கிரீன் ஸ்டேஷனுக்கு வெளியே ஹிலாரியின் நிர்வாண நிலை அந்த நாட்டு நேரப்படி நேற்று காலை நிறுவப்பட்டது. மேலாடை ஏதுமின்றி அந்த சிலை காணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் அந்த சிலை அப்படியே இருந்த நிலையில், அருகேயுள்ள அமெரிக்க, இந்திய, நேஷனல் மியூசியத்தில் பெண் பணியாளர் ஒருவர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

Naked statue of Hillary Clinton in downtown causes fight

அந்த சிலையை கீழே தள்ளி மேலே உட்கார்ந்து கொண்டு, சிலை வடித்த சிற்ப கலைஞரை கண்டபடி திட்டத்தொடங்கினார் அந்த பெண். "இது ஆபாசம்.. என் கண்ணில் இதெல்லாம் பட்டிருக்க கூடாது" என அந்த பெண் சத்தம் போட்டதை கேட்டு பலரும் அங்கு திரள ஆரம்பித்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், யூனியன் சதுக்கம் பகுதியில், அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் நிர்வாண சிலை வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது ஹிலாரிக்கு அதே கதி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தல் களம் மிக மோசமாக போய்க் கொண்டிருப்பதையே இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An artist erected an obscene statue of Hillary Clinton in downtown Manhattan Tuesday morning causing a heated fight between defenders of the profane piece of protest art and women trying to tear it down.
Please Wait while comments are loading...