For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலூன் மூலம் நாசா ஏவிய "விண்வெளி பஸ் ஸ்டாண்ட்".. டிவியில் “லைவ்”!

Google Oneindia Tamil News

நாசா: அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா ஒரு புதுமையைப் படைத்துள்ளது. பிரமாண்டமான பாராசூட் இணைக்கப்பட்ட பலூன் மூலம் அது பறக்கும் சாசர் எனப்படும் விண்வெளியில் செயல்படும் விண்கலம் இறங்கு தளத்தை செலுத்தியுள்ளது.

பெரிய டீ "சாசர்" வடிவிலானது இது. செவ்வாய் கிரக ஆய்வுகளின்போது இங்கிருந்து செலுத்தப்படும் விண்கலங்களை இதுபோன்ற "அவுட்போஸ்ட்" ராக்கெட் இறங்கு தளத்தில் இறக்கிக் கொள்வது தொடர்பான ஆய்வுக்காக இந்த வித்தியாசமான இறங்கு தளத்தை நாசா உருவாக்கியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டு கடைசியாக ஜூன் 28ம் தேதி இது விண்வெளிக்குச் செலுத்தப்பட்டது.

ஹவாயிலிருந்து

ஹவாயிலிருந்து

ஹவாயில் உள்ள கவாய் என்ற இடத்தில் உள்ள அமெரிக்க கடற்படையின் பசிபிக் ஏவுகணைத் தளத்திலிருந்து இது செலுத்தப்பட்டது.

பாராசூட் விரியவில்லை

பாராசூட் விரியவில்லை

இருப்பினும் கடைசி நேரத்தில் பாராசூட் சரியாக விரியவில்லை. இருப்பினும் செலுத்திய வரைக்கும் சோதனையில் நாசா திருப்தி தெரிவித்துள்ளது.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

இந்த ஏவுதலை சிமுல்காஸ்ட் மற்றும் யுஸ்டிரீம் மூலம் நாசா டிவியில் நேரடியாக ஒளிபரப்பினர்.

செவ்வாயைக் குறி வைத்து

செவ்வாயைக் குறி வைத்து

இந்த நூதன சாசர் வடிவிலான இறங்குதளத்தின் முக்கிய நோக்கமே செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்படும் விண்கலங்களை இதுபோன்ற இறங்குதளத்தில் நிறுத்திக் கொள்ளும் நோக்கில்தான்.

விண்வெளி பஸ் ஸ்டாண்ட்

விண்வெளி பஸ் ஸ்டாண்ட்

மேலும் எதிர்காலத்தில் மனிதர்களை ராக்கெட்கள் மூலம் செவ்வாய்க்கு அனுப்பும் நிலை வரும்போது இந்த ராக்கெட் இறங்கு தளத்தில் ராக்கெட் அல்லது விண்கலங்களை இறக்கி அங்கிருந்து செவ்வாய்க்குள் போக வசதி ஏற்படும். கிட்டத்தட்ட ஒரு "பஸ் ஸ்டாண்ட்" போல இது செயல்படும்.

பூமிக்கு மேலே

பூமிக்கு மேலே

இந்த சாசர் வடிவ இறங்கு தளம் பூமிக்கு மேலே நிறுத்தப்பட்டுள்ளது. பாராசூட் சரியாக விரியவில்லை என்ற போதிலும் சோதனை ரீதியிலான இந்த ஏவுதல் வெற்றிகரமானதே என்றும் நாசா தெரிவித்துள்ளது.

40 வருட முயற்சி

40 வருட முயற்சி

இந்த தொழில்நுட்பத்தை கடந்த 40 ஆண்டுகளாகவே செம்மையாக்கி சோதனை செய்து வந்தது நாசா என்பது குறிப்பிடத்தக்கது.

பலூன் மூலம்

பலூன் மூலம்

தரையிலிருந்து கிளம்பிய பலூன் 23 மைல்கள் உயரத்திற்குப் போன பின்னர் பலூன் தனியாக உடைந்து, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விண்கல ஏவுதளத்தை விண்ணில் விட்டது.

மார்ஸ் ரோவை தரையிறக்கலாம்

மார்ஸ் ரோவை தரையிறக்கலாம்

இந்த இறங்குதளத்தில் 2 டன் எடையுள்ள மார்ஸ் ரோவர் போன்றவற்றை தரையிறக்க முடியும். மார்ஸ் ரோவரின் எடையானது ஒரு டன்னாகும்.

பெரிய சைஸையும் இறக்கலாம்

பெரிய சைஸையும் இறக்கலாம்

அதேசமயம், பல பாராசூட்களை இணைத்து பெரிய சைஸ் இறங்குதளத்தை அனுப்புவதன் மூலம் 20 முதல் 30 டன் எடையிலான விண்கலங்களையும் கூட இதில் தரையிறக்க முடியுமாம்.

விரைவில் செவ்வாய்க்கு பயணம்

விரைவில் செவ்வாய்க்கு பயணம்

தற்போது இந்த இறங்குதளம், பூமிக்கு மேலே குறிப்பிட்ட உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து இனிமேல் சோதனைகளை தொடரப் போகிறது நாசா. அதன் பின்னர் இந்த இறங்குதளம் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்படும்.

English summary
After several weather delays, NASA successfully launched and recovered a "flying saucer" into Earth's atmosphere Saturday to test technology that could be used to land on Mars. The experiment off the coast of the Hawaiian island of Kauai tested the disc-shaped vehicle and a giant parachute. The parachute did not fully deploy but NASA still deemed the mission a success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X