உர்ர்ர்.. கிர்ர்ர்... சூரியனின் சத்தம் இப்படியா இருக்கும்?.. நாசா வெளியிட்ட ஆடியோ!
சூரியனின் சத்தம் எப்படி இருக்கு என்று நாசா கண்டுபிடித்து இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: சூரியனின் சத்தம் எப்படி இருக்கு என்று நாசா கண்டுபிடித்து இருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிக்கு பின் இதை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதற்காக சூரியனில் இருந்து வெளியாகும் ஒலியை நாசா வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் இணையதள பக்கத்தில் இதை டவுன் லோட் கூட செய்து கொள்ள முடியும்.
மேலும், இதை வைத்து பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். இது உலக வரலாற்றில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சூரியன்
சூரியனை சுற்றி நிறைய துகள்களும், அணுக்களும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதேபோல் நிறைய அலைநீளத்தில் வெவ்வேறு அலைகள் அதை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. இந்த அலைகள் சூரியனில் ஒரு வித ஒலியை உருவாக்கும். அதேபோல் சூரியனில் ஏற்படும் வெடிப்புகளும் அங்கு ஒலியை உருவாக்கும். இதைதான் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
சத்தம் இப்படித்தான் இருக்கும்
சூரியனில் இருந்து வந்த சத்தம் தற்போது வெளியாகி இருக்கிறது.இதை நாசா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. மொபைல் வைப்ரேட் ஆவது போல இதில் இருந்து சத்தம் வருகிறது. இதை நாசா தனது சவுண்ட் கிளவுட் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது.

எப்படி நடந்தது
இதற்காக நாசாவும், ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமும் சேர்ந்து செயல்பட்டு இருக்கிறது. சோகோ என்று அழைக்கப்படும் சோலார் மற்றும் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற கருவி மூலம் சூரியனில் இருந்து வெளியாகும் சத்தத்தை மட்டும் தனியாக எடுத்து இருக்கிறார்கள். கடந்த 20 வருடமாக சூரியனில் வெளியான சத்தத்தை வைத்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

சோதனை
இது இன்னும் பல விஷயங்களுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. சூரியனை பார்த்து செய்ய முடியாத சோதனைகளை இதை வைத்து செய்ய இருக்கிறார்கள். இது உலக வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications