For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சக்ஸஸ்! 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின் "டார்ட்"! பாதை மாறுமா?

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட் (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. தற்போது அந்த டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த விண்கல் திசை மாறியதா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஸ்பேஸ் கிராப்ட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில் இன்று விண்கல்லில் மோதி உள்ளது.

பூமியில் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் விண்கல் மோதியதில் டைனோசர்களின் இனமே அழிந்தது. அந்த விண்கல் பூமி மீது விழுந்த அடுத்த நொடி மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் பெரும் சுனாமிகள் ஏற்பட்டன.

மலைகள் நொடியில் விழுந்து நொறுங்கின. இதுவே மனித இனம் பின்பு தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. அப்போது அந்த விண்கல்லை டைனோசர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

டோக்கியோ வந்துட்டேன்.. மோடி ட்வீட்! ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே நினைவு நிகழ்வில் பங்கேற்கிறார் டோக்கியோ வந்துட்டேன்.. மோடி ட்வீட்! ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே நினைவு நிகழ்வில் பங்கேற்கிறார்

டைனோசர்

டைனோசர்

பூமியை நோக்கி வந்த விண்கல்லை டைனோசர்களால் திசை திருப்ப முடியாமல் போனது. அதற்கான அறிவோ, அறிவியலோ அப்போது இல்லை. இந்த நிலையில்தான் மனித குலம் அப்படி ஒரு விஷயம் நடந்து இருப்பதற்கான கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளது. ஹாலிவுட் படங்களில் விண்ணில் இருக்கும் விண்கல் பூமியில் மோதி பெரிய சேதங்கள் ஏற்படுவதை நாம் பார்த்து இருப்போம். பூமியை நோக்கி பெரிய விண்கல் வந்து விழும், மொத்த மனித குலமும் அழிவது போன்ற காட்சிகளையும் நாம் பார்த்து இருப்போம்.

டார்ட் மிஷன்

டார்ட் மிஷன்

சில இடங்களில் இப்படிப்பட்ட விண்கற்களை அணு ஆயுத ராக்கெட் கொண்டு தகர்ப்பது போன்ற காட்சிகளும் கூட அமைக்கப்பட்டு இருக்கும். அப்படி ஒரு விண்கல் தாக்குதலுக்கு தயாராகும் வகையில்தான் டார்ட் மிஷனை நாசா கையில் எடுத்தது. அதாவது பூமியை நோக்கி வரும் விண்கல்லை இந்த ஸ்பேஸ் கிராப்ட் மூலம் தாக்க வைத்து அதன் திசையை திருப்புவது. ஆனால் பூமியை நோக்கி ஒரு விண்கல் வரும் வரை காத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான் பூமிக்கு அருகில் உள்ள வேறு ஒரு விண்கல்லை மோதி நாசா தற்போது சோதனை செய்து உள்ளது. இந்த சோதனையில் முதல் கட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.

எப்படி?

எப்படி?

Double Asteroid Redirection Test (Dart) என்பது விண்கல் பாதை விலக்க சோதனை திட்டம்தான் ஆகும். . Dart மிஷனின் படி பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருக்கும் Dimorphos என்ற விண்கல்லை நோக்கித்தான் இந்த ஸ்பேஸ் கிராப்ட் அனுப்பப்பட்டது. இது பூமிக்கு மிக அருகில் இருக்கும் கொஞ்சம் ஆபத்தான விண்கல். ஆனால் பூமியை மோதும் வாய்ப்பு இல்லை. இந்த Dimorphos அருகிலேயே இருக்கும் Didymos என்ற இன்னொரு விண்கல்லை சுற்றி வருகிறது.

நிலவு

நிலவு

அதாவது Didymos விண்கல்லுக்கு நிலவு போல Dimorphos சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருக்கும் Dimorphos விண்கல்லைதான் நாசாவின் டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் தாக்கி உள்ளது. கடந்த நவம்பர் அன்று விண்ணில் டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் கலிபோர்னியாவில் இருந்து வெற்றிகரமாக சில நிமிடங்களுக்கு முன் ஏவப்பட்டது.

வெற்றி

வெற்றி

புவி வட்டப்பாதையை கடந்து இது வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்து விண்கல்லை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகிறது. இது பார்க்க பெரிய சைஸ் கோல்ப் மைதானம் போல இருக்கும். அந்த விண்கல் பார்க்க பிரமிட் அளவில் இருக்கும். இதை இன்று அதிகாலை 5.30 மணிக்கு துல்லியமாக டார்ட் விண்கலம் மோதியது. Dimorphos அருகே செல்ல செல்ல அதை புகைப்படமாக டார்ட் வெளியிட்டது. முதலில் மங்கலாக புள்ளி போல Dimorphos தெரிந்தது. அதன்பின் டார்ட் அருகே செல்ல செல்ல Dimorphos உருவம் தெளிவாக தெரிந்தது. கடைசியில் டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் Dimorphos விண்கல்லின் மையத்தில் மிக துல்லியமாக மோதியது. இதன் மூலம் Dimorphos எதிர்பார்த்தபடி திசை மாறும் என்று கூறப்படுகிறது.

வெற்றியா?

வெற்றியா?

இந்த மிஷன் வெற்றிபெற்றதா என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. மிக துல்லியமாக Dimorphosஐ டார்ட் மோதிவிட்டது. அது திசை மாறியதா என்பது வரும் நாட்களில் தெரியும். Dimorphos விண்கல்லை சில மீட்டர்கள் திசை மாற்றுவதே இதன் நோக்கம் ஆகும். 22,500 வேகத்தில் 690 கிலோ எடை கொண்ட டார்ட் விண்கலம் துல்லியமாக Dimorphosஐ தாக்கி உள்ளது. அடுத்த சில வாரங்கள் Dimorphos மற்றும் அது சுற்றும் Didymos இரண்டையும் ஆய்வு செய்வார்கள். Didymosயை முன்பை விட குறைந்த நேரத்தில் Dimorphos சுற்றி வந்தால், அது சரியாக திசை மாற்றப்பட்டு உள்ளது என்றுஅர்த்தம் . இரண்டரை நிமிடங்களில் நொடிகளில் இருந்து 10 நிமிடம் வரை இதன் சுற்றுக்காலம் அளவு குறைந்து இருந்தால் Dimorphos சரியாக திசை மாற்றப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ஏன்

ஏன்

இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 325 மில்லியன் டாலர் ஆகும். இது வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் எதிர்காலத்தில் பூமியை நோக்கி விண்கல் வந்தால் அதை டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் மூலம் பாதை மாற்ற முடியும். இப்போது விண்ணில் ஏவப்பட்ட டார்ட் ஸ்பேஸ்கிராப்டில் LICIA க்யூப் என்ற சாட்டிலைட் இருந்தது. Dimorphos விண்கல்லை தாக்கி அதன் பாதையை டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் எப்படி மாற்றுகிறது என்பதை LICIA க்யூப்சாட்டிலைட் மொத்தமாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வந்தது. இதே சாட்டிலைட்டை வரும் நாட்களில் மிஷன் முழு வெற்றிபெற்றதா என்பதையும் கண்டுபிடித்து உள்ளது. உலகிலேயே இதுதான் விண்கல் ஒன்றின் பாதையை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட முதல் திட்டம் ஆகும்.

English summary
NASA's DART spacecraft succcessfully collide with Dimorphos Asteroid: The final result yet to known .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X