For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்.. நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் 22 ஆவது பிரதமராக பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் (PTI) கட்சி தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான, இம்ரான்கான் பதவியேற்றார்.

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த நாளே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 116 தொகுதிகளை கைப்பற்றிய தனிப்பெரும் கட்சியாக இம்ரான்கான் கட்சி உருவெடுத்து.

     Navjot Singh Sidhu joins ImranKhans oath-taking ceremony

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 64 தொகுதி களிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மொத்தம் 342 உறுப்பினர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க 172 உறுப்பினர் பலம் தேவை. இதையடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார் இம்ரான்கான்.

    நேற்று, ஆட்சியமைப்பதற்கான உரிமை மசோதாவை பிடிஐ கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விழாவில் இந்திய நேரப்படி காலை 10.45 மணியளவில் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார்.

    பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, இதில் பங்கேற்றார். தான் ஒரு அரசியல்வாதியாக இங்கு வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

    இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் அவரது மத ஆலோசகரும், 3வது மனைவியுமான புஷ்ரா மனேகா பங்கேற்றார்.

    English summary
    Cricketer-turned-politician and Pakistan Tehreek-e-Insaf (PTI) chairman Imran Khan sworn in as the 22nd Prime Minister of Pakistan on Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X