இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா? ஆபீஸை அட்டாக் செய்த ஈரான்
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை குறிவைத்து அவரது அலுவலகத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை ஈரான் ராணுவம் உறுதி செய்திருக்கும் வேளையில் இஸ்ரேல் இதனை உறுதிப்படுத்தவில்லை. இதனால் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா அல்லது கொல்லப்பட்டாரா? என நெட்டிசன்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

நெதன்யாகுவை குறிவைத்து தாக்குதல்
குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து ஈரான் சரமாரியக ஏவுகணைகளை ஏவி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் நெதன்யாகுவை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் டெல் அவிவ் அலுவலகத்தின் மீது "திடீர் ஏவுகணை" தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் இன்று அறிவித்துள்ளன. இதனால் நெதன்யாகுவின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
உறுதிப் படுத்தாத இஸ்ரேல்
ஆனால் இஸ்ரேல் இதனை மறுத்துள்ளது. நெதன்யாகு வேறு இடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. ஈரான் ராணுவ சிறப்பு படையான புரட்சிகரப் பாதுகாப்பு படை, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறும் நிலையில் இஸ்ரேல் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இதனால் என்ன நடந்தது என தெரியவில்லை. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் சூழலில் நெதன்யாகு தற்போது உயிருடன் இருக்கிறாரா? அல்லது கொல்லப்பட்டாரா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுந்துள்ளது.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
நெட்டிசன் ஒருவர், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா? அல்லது இறந்துவிட்டாரா? என்பது குறித்து இஸ்ரேலிய ஊடகங்களிலிருந்து எந்த தகவலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். ஆனால் மற்றொரு நெட்டின்சன், "அப்படி என்றால் நெதன்யாகு இறந்துவிட்டாரா?" என்று பதிவிட்டுள்ளார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்











Click it and Unblock the Notifications