மசூதிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்.. லைவ் வீடியோ வெளியிட்டு நடந்த நியூசி. துப்பாக்கி சூடு!
நியூசிலாந்தில் மசூதிக்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அதை லைவ் வீடியோவாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video

வெலிங்டன்: நியூசிலாந்தில் மசூதிக்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அதை லைவ் வீடியோவாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இன்று மிக மோசமான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கிறது. அங்கு உள்ள மசூதியில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூசிலாந்தின் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய சிலர் உள்ளே புகுந்து தாக்கி இருக்கிறார்கள். இதில் 9 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

இரண்டு மசூதி
துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் அடுத்தடுத்த நிறைய மசூதிகள் இருக்கிறது. அதில் இரண்டு மசூதிகளில்தான் முதற்கட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளே 300 பேருக்கும் அதிகமான மக்கள் தொழுகை நடத்திக் கொண்டு இருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீடியோ வெளியிட்டார்
இந்த தாக்குதலை நடத்திய நபர் அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை லைவாக ஒளிபரப்பி இருக்கிறார். ஆனால் இந்த வீடியோ உடனடியாக இணையத்தில் அனைத்து தளங்களில் இருந்தும் நீக்கப்பட்டது.

என்ன செய்தார்
இந்த வீடியோவில் அந்த நபர் மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது பதிவாகி உள்ளது. மக்களை நோக்கி சரமாரியாக அவர் தாக்குதல் நடத்துகிறார். கண்ணில்படும் மக்களை எல்லாம் சரமாரியாக அவர் தாக்கி, சாகடிப்பது இதில் பதிவாகி உள்ளது.

எத்தனை பேர்
முதலில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது ஒரே ஒரு நபர்தான் என்று கூறப்பட்டது. அதன்பின் தற்போது இதை நடத்தியது ஒருவர் கிடையாது மூன்று பேர் என்று செய்திகள் வருகிறது. இதுவரை இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் யாரும் பிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications