For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

200 போக்கோ ஹரம் தீவிரவாதிகளை வெட்டிக் கொன்ற நைஜீரிய மக்கள்

Google Oneindia Tamil News

மைதுகுரி: நைஜீரியாவில் மீண்டும் கலவரம் செய்த 200 தீவிரவாதிகளை பொதுமக்கள் வெட்டிக் கொன்றுள்ளனர்.

நைஜீரியாவில் "போக்கோ ஹாரம்" தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர்.

Nigerian villagers fight off attacks by Boko Haram

மாணவிகள் கடத்தல்:

கடந்த மாதம் பள்ளி மாணவிகள் 300 பேரை கடத்தி சென்று சிறை வைத்துள்ளனர். அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை. அனைத்துக்கும் மேலாக அவர்களை "பாலியல்" அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

கிராமங்களுக்குள் கலகம்:

இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகிழக்கு நைஜீரியாவில் கலாபல்ஜ் மாவட்டத்தில் மெனாரி, சான்கயாரி, கராவா ஆகிய 3 கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் வீடுகளில் புகுந்து மக்களை தாக்க முயன்றனர்.

திருப்பி தாக்கிய மக்கள்:

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கொதித்து எழுந்தனர். வீட்டில் இருந்து அரிவாள், கத்தி, தடி, கற்கள் போன்ற ஆயுதங்களால் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்கினர். அவர்களை அடித்தும், வெட்டியும் கொன்றனர். கிராம மக்களின் தாக்குதலில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் அதிர்ச்சி:

மக்கள் துணிந்து களம் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் எஞ்சியவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என தப்பி ஓடி விட்டனர்.

அதிபர் பயணம் ரத்து:

இதற்கிடையே மாணவிகள் கடத்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆறுதல் கூற நைஜீரியா அதிபர் குட்லக் ஜோனாதன் முடிவு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி அவர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டார்.

English summary
Residents of three villages in northeastern Nigeria took security into their own hands this week, repelling attacks by Boko Haram insurgents and killing more than 200 of them, residents and officials said.Hundreds of Boko Haram fighters stormed the villages of Menari, Tsangayari and Garawa in the ethnic Shuwa-dominated Kalabalge District on Tuesday. Boko Haram -- the group responsible for the kidnapping of nearly 300 schoolgirls from the same region -- was met with stiff resistance as locals put up a fierce fight, witnesses said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X