குலுங்கிய இந்தோனேசியா! 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜார்த்தா: தீவு நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவு நாடான இந்த இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.
இதற்குக் காரணம் என்னவென்றால்.. ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது.. இதுவே அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணமாகும்.. நிலநடுக்கம் மட்டுமின்றி அப்பகுதியில் எரிமலை வெடிப்புகளும் கூட அடிக்கடி ஏற்படும்.

இந்தோனேசியா
இதற்கிடையே இந்தோனேசியாவில் தற்போது மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள முக்கியமான கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக சாலைகளுக்குத் தஞ்சம் புகுந்தனர்.

சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கம் ரொம்பவே சக்திவாய்ந்த ஒன்றாக இருந்ததால்.. அங்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், சுமார் மூன்று மணிநேரத்திற்கு பிறகும் அங்கு கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது. அங்கு உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை 2:47 மணிக்கு 130 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதால் காலை 5.43 மணிக்குச் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

பாதிப்பு
அங்குள்ள கட்டிடங்கள் வழக்கமாக நிலநடுக்க பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ளும் வகையிலேயே கட்டுப்பட்டிருக்கும். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு கட்டிடங்களில் லேசான பாதிப்புகளே ஏற்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் வடக்கு ஆஸ்திரேலியாவிலும் உணரப்பட்டது. அந்தளவுக்கு வலிமையான ஒன்றாக இது இருந்துள்ளது. மேலும், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு குறைந்தது 4 சிறு அதிர்வுகளும் அடுத்தடுத்து ஏற்பட்டதாகவும் அங்குள்ள வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

வழக்கமான பணிகளை தொடரலாம்
அதில் ஒன்று அதிகபட்சம் ரிக்டர் அளவுகோலில் 5.5ஆகப் பதிவாகியுள்ளது. கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதால் கடற்கரைக்கு அருகில் வசித்த மக்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் இந்தோனேசியா வல்லுநர்கள், விரைவில் இது குறித்துத் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications