தடைகளை கொண்டு வந்தால் பதிலடிக்கொடுக்கப்படும்..! ஐநாவை மிரட்டுகிறதா வடகொரியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சியோல்: வடகொரியாவின் அணுஆயுத சோதனை தடுக்க அந்நாட்டு மீது தடைகளை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வடகொரியா மீது தடைகளை விதித்தால் எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடகொரியா மிரட்டியுள்ளது.

யாருக்கும் அஞ்சாமல் வடகொரியா தன்பாட்டுக்கு அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என காரியத்தில் கண்ணாக உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தனது ஆயுத சோதனைகளில் பின்வாங்காமல் உள்ளது.

அவ்வப்போது ஆயுத சோதனை நடத்தி அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளையும் மிரட்டி வருகிறது. இதனால் அந்நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்காவிடம் இருந்த தப்ப

அமெரிக்காவிடம் இருந்த தப்ப

இந்நிலையில் ஆயுத சோதனை குறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது அமெரிக்காவின் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்ததாக அவர் கூறியுள்ளார்.

தக்க எதிர் நடவடிக்கை

தக்க எதிர் நடவடிக்கை

தங்களின் நாட்டை பாதுகாத்து கொள்வது என்பது வட கொரியாவின் சட்டப்பூர்வ உரிமை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஐநா வடகொரியா மீது தடைகளை கொண்டுவந்தால் தக்க எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்த..

பேச்சுவார்த்தை நடத்த..

இதனிடையே அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இருநாடுகளும் இணைந்து வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

ஐநாவை மிரட்டுகிறதா வடகொரியா?

ஐநாவை மிரட்டுகிறதா வடகொரியா?

மேலும் வட கொரியா தனது ஏவுகணை மற்றும் அணு ஆயுதசோதனைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. ஆனால் ஐநாவையே மிரட்டும் வகையில் வடகொரிய வெளியுறத்துறை அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
North korea foreign affair minister said that they will respond if UN bans. North Korea testing missiles for safety He said.
Please Wait while comments are loading...