For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம்க்கும்.. ஒரு வாழைப்பழத்துக்கே வழியில்லையாம்.. இதுல "கொழுக்மொழுக்" அதிபரோட சவாலை பாருங்க!

வடகொரியா மக்கள் பட்டினியால் சிக்கி உள்ளனர்

Google Oneindia Tamil News

பியோங்யாங்: கொழுக்மொழுக்கென்று இருக்கும் அதிபர் கிம்ஜாங் உன் நாட்டில், யாருக்கும் சாப்பாடு இல்லையாம்.. பட்டினி தாண்டவமாடுகிறதாம்.. ஒரு வாழைப்பழம் கூட வாங்கி சாப்பிட முடியவில்லையாம்.. இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்காவுடன் "சேலஞ்ச்" செய்துள்ளார் அதிபர் கிம்ஜாங்.

வடகொரியா ஒரு வித்தியாசமான நாடு.. இதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.. உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா..!

இது ஒரு கம்யூனிச நாடு என்ற போதிலும், எப்போதுமே கடுமையான சட்ட திட்டங்கள் இயற்றப்படுவது வழக்கமான ஒன்று..!

திடீரென பல கிலோ எடையை இழந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங்.. டய்ட் காரணமாக?இல்லை மோசமான உடல்நிலை பாதிப்பா?திடீரென பல கிலோ எடையை இழந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங்.. டய்ட் காரணமாக?இல்லை மோசமான உடல்நிலை பாதிப்பா?

வறுமை

வறுமை

சில சமயம், இந்த நாட்டின் சட்டதிட்டங்களை பல்வேறு நாட்டினரும் விவாதிப்பார்கள்.. அதற்கு காரணம் அதிபர்தான்.. இவர் திடீரென காணாமல் போவார்.. திடீரென மக்கள் முன் தோன்றுவார்.. எல்லா நாட்டிலும் தொற்று அதிகமாக வரும்நிலையில், இந்த நாட்டில் தொற்று இருக்கிறதா? என்று யாருக்குமே தெரியாது.. அவ்வளவு ரகசியமாக தன் நாட்டு விஷயங்களை வைத்திருப்பார் கிம்.

விதிகள்

விதிகள்

ஆனால், வடகொரியாவையும் கொரோனா விடவில்லை என்பதே உண்மை.. தன் நாட்டை தொற்று தாக்கிவிடக்கூடாது என்பதற்காக ஏகப்பட்ட விதிகளை கொண்டு வந்தார் அதிபர்.. இந்நிலையில், வட கொரியாவில் பட்டினி தாண்டமாடுகிறதாம்.. இதுவரை வட கொரியாவுக்கு சீனாவில் இருந்து தான் பல்வேறு உதவிப் பொருட்கள் வந்து கொண்டிருந்தன... இப்போது அவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.

வறுமை

வறுமை

அதனால், பொருட்கள் வருவது நின்றுவிட்டது.. விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாய கருவிகள் போன்றவைகள் வராமல் பாதிப்பை தந்தது.. இதுபோதாதென்று புயல் வந்து நாட்டையே மேலும் மோசமாக்கிவிட்டது.. இதனால் மக்களுக்கு சாப்பாடு இல்லை.. இவர்கள் அதிகமாக அரிசி, மக்காச்சோளம் தான் சாப்பிடுவார்கள்..

 மளிகை பொருட்கள்

மளிகை பொருட்கள்

இந்த பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.. ஒரு 1 கிலோ வாழைப்பழம் 3,500 ரூபாயாம்.. யார் கையிலும் காசில்லாமல் வாழைப்பழம் கூட வாங்கி சாப்பிட முடியாத நிலைமை உள்ளது.. 15 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது... பல லட்சம் பேர் பட்டினி கிடக்கிறார்கள்.. 2 நாளைக்கு ஒருமுறைதான் சாப்பிடுகிறார்கள்.. இந்த விஷயத்தை இவ்வளவு நாள் பொத்தி பொத்தி வைத்திருந்த கிம்ஜாங், இப்போது வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுவிட்டார்.

பதிலடி

பதிலடி

இப்படி ஒரு பிரச்சனை தன் நாட்டில் இருந்தாலும், வெளியுறவு விஷயத்தில் கறாராகவே இருக்கிறது வடகொரியா.. அமெரிக்காவுடன் மோதலுக்கு தயாராக இருப்பதாக அதிபர் சவால் விட்டுள்ளார்.. வட கொரியா, அணுசக்தி திட்டத்தை கைவிட்டு விட்டு, பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.. இதற்குதான் கிம் பதிலடி தந்துள்ளார்.

சவால்

சவால்

தன் நாட்டின் அணு ஆயுதங்களை பலப்படுத்தவும், தனது கொள்கையை பின்பற்றுமாறு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுப்பதற்கு தான் தயார் என்று சவால் விட்டுள்ளார்.. அமெரிக்காவின் ஜோ பிடன் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்னதுடன், மோதலுக்கும் தயார் என்று சொல்லி உள்ளாராம்...!

English summary
North Korea Kim Un vows to be ready for confrontation with America
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X