அடங்காத கிம் ஜாங்.. ‛புத்திசாலினு’ பாராட்டிய டிரம்புக்கு வந்த சோதனையை பாருங்க! வடகொரியா தந்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அதிபர் கிம் ஜாங் உன் புத்திசாலியான நபர் என்று பாராட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது வடகொரியா. டிரம்ப் பேச்சால் இருநாடுகள் இடையேயான உறவு மேம்படும் என்று நினைத்த நிலையில் கிம் ஜாங் உன் செய்த செயல் அமெரிக்காவுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. அப்படி என்ன நடந்தது?.

அமெரிக்கா, வடகொரியா இடையே கடும் மோதல் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தார். இந்த சமயத்தில் கிம் ஜாங் உன் - ஜோ பைடன் இடையே ஒருமுறை கூட சந்திப்பு நிகழவில்லை.

donald trump kim jong un north korea

அதேவேளையில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஜோபைடன் உதவி செய்தார். இதனால் கிம் ஜாங் உன், ஜோ பைடன் ஆட்சி காலத்தில் அமெரிக்காவை கடுமையாக எதிர்த்தார்.

அமெரிக்கா - வடகொரியாக இடையேயான விரிசல் என்பது அதிகரித்தது. அமெரிக்காவை மிரட்டும் வகையில் புதிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நடத்தினார். அதோடு வடகொரியாவில் இருந்தே அமெரிக்காவை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா வைத்திருப்பதாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நல்ல உறவு என்பது இருந்தது. டொனால்ட் டிரம்ப் 2017 முதல் 2021 வரை அதிபராக இருந்த 4 ஆண்டுகளில் 3 முறை கிம் ஜாங் உன்னுடன் சந்திப்பை நிகழ்த்தி இருந்தார். அமெரிக்க அதிபர் - வட கொரிய அதிபர் சந்திப்பு வரலாற்றிலேயே முதன்முறையாக ட்ரம்ப் காலத்தில்தான் நிகழ்ந்தது என்பது நினைவு கூரத்தக்கது.

இதனால் மீண்டும் டிரம்ப் அதிபராக வந்துள்ளதால் மீண்டும் அமெரிக்கா - வடகொரியா மோதல் என்பது தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை பாராட்டினார். அப்போது டொனால்ட் டிரம்ப், ‛‛கிம் ஜாங் உன் மதவெறியர் அல்ல. அவர் ஒரு புத்திசாலியான நபர்'' என்று பாராட்டினர். இதனால் விரைவில் இருதலைவர்களும் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் வடகொரியா நேற்று குரூஸ் வகை ஏவுகணையை ஏவி அதிரடியாக சோதனை செய்துள்ளார் கிம் ஜாங் உன். இது இந்த ஆண்டின் 3வது ஏவுகணை சோதனையாகும். இந்த ஏவுகணை சோதனை மூலம் அமெரிக்காவுக்கு அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ளது. இதில் அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாக உதவி செய்து வருகிறது. தென்கொரியாவுடன் சேர்ந்து வடகொரியா எல்லையில் அமெரிக்கா போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.

இது கிம் ஜாங் உன்னுக்கு கடும் டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம் என்று அவர் நினைக்கிறார். ராணுவம், ஆயுதம் மற்றும் ஏவுகணை கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக தான் நேற்று வடகொரியா குரூஸ் வகை ஏவுகணையை ஏவி சோதனைண செய்துள்ளது.

இந்த ஏவுகணை என்பது அணுஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 1,500 கிலோமீட்டர் (932-மைல்) தொலைவு வரையிலான இலக்கை தாக்கி அழிக்க கூடியது என்று கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து கிம் ஜாங் உன், ‛‛மிகவும் சக்தி வாய்ந்ததாக ராணுவத்தை மாற்ற வேண்டும். போர் திறன் பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளாராம்.

அதோடு இந்த ஏவுகணை சோதனை என்பது எல்லையில் அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியை அதிகரிப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜாங் உன்னை பாராட்டினாலும் கூட கிம் ஜாங் உன்னின் இந்த செயல் என்பது அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தாலும் கூட அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார் என்பதை காட்டும் வகையில் தான் உள்ளது. இதனால் அமெரிக்கா - வடகொரியா இடையே டிரம்ப் பதவிக்காலத்தில் சுமூக உறவு ஏற்படுகிறதா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+