For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொத்தமாக மறைத்துவிட்டார்கள்.. உலகை அதிர வைக்கும் ரஷ்யாவின் அணு ஏவுகணை.. வெளிவரும் உண்மைகள்!

ரஷ்யாவில் கடந்த வாரம் அணு சக்தி விபத்து ஒன்று நிகழ்ந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஷ்யாவில் வெடித்தது அமெரிக்காவின் போட்டியான அணு உலை?!

    மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த வாரம் அணு விபத்து ஒன்று நிகழ்ந்தது. இதையடுத்து அணுக்கதிர் வீச்சை அளவிடும் சர்வதேச சோதனை மையங்கள் அங்கு மூடப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா வெளி உலகிடம் இருந்து எதையோ மறைப்பது தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 8ம் தேதிதான் அந்த சம்பவம் நடைபெற்றது. ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே திடீர் என்று பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

    அந்த மையத்தில் இருந்து பெரிய அளவில் புகையும் நெருப்பும் வந்தது. ஆனால் இது என்ன மாதிரியான விபத்து, அங்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

    ரஷ்யா விளக்கம்

    ரஷ்யா விளக்கம்

    இந்த நிலையில் இது தொடர்பாக ரஷ்யா அளித்துள்ள விளக்கத்தின் படி அங்கு இருக்கும் நேனோக்சா ஏவுகணை சோதனை மையத்தில் சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக கொஞ்சம் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது அணு ஆயுதம் இல்லை. மக்கள் அணுக்கதிர் வீச்சில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    ஆனால் அமெரிக்கா இதை மறுத்துள்ளது. ரஷ்யா மிகப்பெரிய அணு ஏவுகணை ஒன்றை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக செய்யப்பட்ட சோதனையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இது கண்டிப்பாக அணு ஆயுத சோதனைதான் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அணு சக்தி மூலம் இயங்க கூடிய புதிய ஏவுகணை ஒன்றை ரஷ்யா உருவாக்கி உள்ளது.

    என்ன பெயர்

    என்ன பெயர்

    அணு சக்தி மூலம் இயங்க கூடிய இந்த ஏவுகணையின் பெயர் ஸ்கைஃபால் (skyfal) அல்லது உலக அழிவிற்கான ஆயுதம் (doomday weapon). இதை வைத்து உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும் தாக்கலாம். இதை சோதனை செய்யும் போதுதான் ரஷ்யா தோல்வி அடைந்துள்ளது. இதை உலகில் இருந்து ரஷ்யா மறைக்கிறது என்று அமெரிக்கா கூறி வருகிறது.

    என்ன சோதனை

    என்ன சோதனை

    உலக நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்துவதை கண்காணிப்பதற்காக உலகம் முழுக்க சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் இது அமைக்கப்பட்டது. இதில் பதிவாகும் அணு கதிர் வீச்சு அளவுகள் உலகில் எல்லா நாடுகளுக்கும் வழங்கப்படும்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் ரஷ்யாவில் இந்த அணு சோதனை நடந்த பகுதியில் இருக்கும் இரண்டு அணு கதிர் வீச்சு சோதனை மையங்கள் கடந்த இரண்டு வாரமாக இயங்கவில்லை. இங்கிருந்து அணு கதிர் வீச்சு குறித்த எந்த புள்ளி விவரமும் உலகில் எந்த நாட்டிற்கும் அனுப்பப்படவில்லை. சர்வதேச விதிகளை மீறி ரஷ்யா அந்த சோதனை மையங்களை மூடியுள்ளது.

    என்னமோ

    என்னமோ

    இதனால் அங்கு அதிக அளவில் கதிர் வீச்சு இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதை உலக நாடுகளிடம் இருந்து மறைப்பதற்காக ரஷ்யா இந்த மையங்களை மூடி உள்ளது. ரஷ்யாவில் எதோ மர்மமான விஷயம் நடக்கிறது.. அது கண்டிப்பாக ரஷ்யாவிற்கு நல்லது இல்லை மனித குலத்திற்கும் நல்லது இல்லை!

    English summary
    Nuclear monitoring sites lost contact in Russia after Doomsday weapon blast - report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X