For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க குடியுரிமை விதிமுறைகளில் மாற்றம்... பேஸ்புக் மூலம் அறிவிக்கிறார் ஒபாமா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் குடியுரிமை விதிமுறைகளில் பெரிய அளவிலான சீர்திருத்த மாற்றத்தை அதிபர் பாரக் ஒபாமா மேற்கொள்ளவுள்ளார். இதை இன்று அவர் பேஸ்புக் மூலம் அறிவிக்கவுள்ளார்.

நாட்டின் குழப்பமான குடியுரிமை விதிமுறைகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யவுள்ளார் ஒபாமா. இதுதொடர்பான திட்டங்களை அவர் அமெரிக்க மக்களுக்கு பேஸ்புக் மூலம் அரிவிக்கவுள்ளார்.

தான் எடுக்கவுள்ள நடவடிக்கையால், அமெரிக்காவில் உள்ள 1.1 கோடி வேலையில்லாத, வேலை ஸ்திரமில்லாத அமெரிக்கர்களுக்கு பலன் கிடைக்கும் என்று ஒபாமா நம்புகிறார்.

Obama to announce major immigration reform on Facebook

சமீபத்திய ப்யூ ஆய்வு மைய அறிக்கையின்படி அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவிலிருந்து பெருமளவில் சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அதேபோல இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 4.50 லட்சம் பேர் உள்ளனர். 2 ஆவது சட்டவிரோத குடியேறிகள் இந்தியர்கள் என்று ப்யூ கூறுகிறது.

இதுகுறித்து ஒபாமா வெளியிட்ட ஒரு வீடியோ அறிக்கையில், " நமது நாட்டு குடியுரிமைச் சட்டம் சரியில்லை என்பைத அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். இந்த பிரச்சினையை இத்தனை காலமாக இழுத்தடிக்க அமெரிக்க அரசு அனுமதித்து விட்டது துரதிர்ஷ்டவசமானது. இதை சரி செய்ய நான் முயலப் போகிறேன்" என்றார் அவர்.

இந்த முடிவை , திட்டத்தை பேஸ்புக் மூலம் வெளியிடும்போது பலரும் பார்க்க முடியும் என்பதால் பேஸ்புக்கை தேர்வு செய்துள்ளாராம் ஒபாமா.

English summary
US President Barack Obama has opted for Facebook as a platform to inform Americans about his executive actions on fixing the country's "broken" immigration system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X