For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு சரிவராது- ஒபாமா கைவிரிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக் பிரச்சினைக்கு அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர, ராணுவ ரீதியிலான தீர்வை எட்ட முடியாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டு பல நகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி நகரங்களை மீட்டுக்கொடுக்கும் என்று ஈராக் அரசு நம்பிக்கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

Obama to Iraqis: No military solution, seek political solution

ஈராக் அனைவரையும் ஒருங்கித்த ஒரு ஜனநாயகமாக வளர அமெரிக்க வாய்ப்பளித்திருந்தது. முஸ்லிம் மதத்திலுள்ள அனைத்து பிரிவினரையும் அரவணைத்து செல்லும் ஈராக்கை பார்க்கவே அமெரிக்காவும் விரும்புகிறது. ஈராக்கில் அமெரிக்க துருப்புக்களை நிலை நிறுத்த விரும்பவில்லை. அதே நேரம் ராணுவ ஆலோசகர்கள் 300 பேரை ஈராக்கிற்கு அனுப்பி வைக்க உள்ளேன். அவர்கள் சனிக்கிழமை அந்த நாட்டை சென்றடைவார்கள்.

ஈராக் கிளர்ச்சியாளர்களுடன் அரசியல்ரீதியாக அந்த நாடு தீர்வை எட்ட வேண்டும். அப்படியில்லாவிட்டால், ராணுவ ரீதியிலான தீர்வை எட்ட முடியும் என்று நான் கருதவில்லை என்று ஒபாமா கூறியுள்ளார்.

English summary
In the face of Sunni militants' menacing advance towards Baghdad, US President Barack Obama has asked Iraqi leaders to come up with a political solution because "if they don't, there won't be a military solution to the problem."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X