For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மிஸ்டர் பிரசிடென்ட்' ஆக முதல்முறையாக தனது தந்தை நாடான கென்யா செல்லும் ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரான பிறகு முதல் முறையாக தனது தந்தையின் நாடான கென்யாவுக்கு செல்ல உள்ளார் என்று வெள்ளை மாளிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாரக் ஒபாமா அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது தந்தையின் நாடான கென்யாவுக்கு செல்கிறார். இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Obama makes first trip to Kenya as President

அதிபர் ஒபாமா ஜூலை மாதம் கென்யாவுக்கு செல்ல உள்ளார். அங்கு நடக்கும் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்த சந்திப்புகள் மற்றும் 2015 தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாட்டுக்கு அதிபர் ஒபாமா செல்வது இது நான்காவது முறை ஆகும். முன்னதாக அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அங்கு சென்றார். மேலும் செனகல், தான்சானியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அவர் கடந்த 2013ம் ஆண்டு சென்றார்.

ஒபாமாவின் தந்தை பாரக் ஒபாமா சீனியர் கென்யாவில் பிறந்து வளர்ந்தவர். அவர் 1950கள் மற்றும் 60களில் அமெரிக்காவில் வசித்தார். அதன் பிறகு மீண்டும் கென்யா திரும்பிய அவர் 1982ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி பலியானார்.

English summary
Barack Obama is going to make his first trip to his father's native Kenya as president this summer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X