ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா.. ஊரடங்கிலும் இந்த 91 வயசு பாட்டி செஞ்ச வேலையைப் பாருங்க!
கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே பேஷன்ஷோ நடத்தி பிரபலமாகி விட்டார் 91 வயது அமெரிக்கப் பாட்டி ஒருவர்.
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 91 வயது மூதாட்டி, விதவிதமாக ஆடைகள் அணிந்து நடத்திய பேஷன் ஷோ இணையத்தை கலக்கி வருகிறது.
Recommended Video
மற்ற நாடுகளை விட கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்தியாவை போலவே அங்கும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எப்போதும் சுதந்திரமாக ஊர் சுற்றித்திரிந்த அமெரிக்கர்களால் வீடடங்கி இருக்க முடியவில்லை. அரசின் உத்தரவுக்கு எதிராக பலர் வெளியே வந்து போராட்டம் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

91 வயது மூதாட்டி
அதுபோல் தான் ஜோர்ஜியா மாநிலத்தை சேர்ந்த 91 வயது மூதாட்டி பெட்டி மெக்டோனல்ட் வீட்டில் இருக்க முடியாமல் ஊர் சுற்றி வந்திருக்கிறார். "வயதானாவர்களைத் தான் கொரோனா எளிதாக தாக்குகிறது. எனவே வீட்டிலேயே இருங்கள்" என பெட்டியிடம் பலர் அறிவுரை கூறினர்.

ஊர் சுற்றிய பாட்டி
ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அந்த பாட்டி, தினமும் சர்ச்க்கு போவது, முதியோர் மையத்துக்கு போவது என ஊர் சுற்றி வந்திருக்கிறார். தினமும் விதவிதமாக ஆடை அணிந்து வெளியே சென்று பழகிய தன்னால், வீட்டில் இருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என புலம்பி வந்திருக்கிறார் பெட்டி.

பாட்டியின் பேஷன் ஷோ
இதையறிந்த அவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் டெய்லர் என்பவர், மூதாட்டிக்கு பேஷன் ஷோ போல் விதவிதமாக ஆடை அணிந்து வீட்டருகிலேயே நடந்து செல்ல யோசனை சொல்லியிருக்கிறார். டெய்லரின் அந்த சொற்கள், பெட்டியின் காதில் தேனாய் பாய்ந்திருக்கிறது.

கணவருக்கு டெடிகேட் பண்றேன்
உடனே பேஷன் ஷோவுக்கு தயாரான பெட்டி பாட்டி, விதவிதமாக உடை அணிந்து தினமும் ரேப் வாக் செய்திருக்கிறார். அமெரிக்க விமானப்படையில் பணியாற்றி ஒய்வுபெற்று, கடந்த 2007ம் ஆண்டு காலமான தனது கணவர் ஜான் ஹென்ரி மெக்டோனால்டுக்கு இந்த பேஷன் ஷோவை டெடிகேட் செய்வதாக கூறுகிறார் இந்த மாடலிங் பாட்டி.

முதல் சந்திப்பு
பாட்டி செய்த பேஷன் ஷோவை வீடியோ எடுத்து, தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டார் அந்த டெய்லர். அந்த வீடியோவில், தனது கணவரை முதன்முதலில் சந்தித்தது, காதலில் விழுந்தது, திருமணம் செய்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பெட்டி பகிர்ந்துள்ளார்.

கமெண்ட்களுக்கு பதில்
ஒரே வீடியோவாக இல்லாமல், ஒவ்வொரு உடைக்கும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார் டெய்லர். வீடியோக்களுக்கு கீழே பதிவிடப்படும் கமெண்ட்களுக்கு டெய்லர் மூலம் பதில் அளிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் பெட்டி.

நேச்சுரல் ஸ்டார்
பெட்டி மெக்டோனால்டின் இந்த பேஷன் வீடியோக்கள் தான் யூடியூப்பின் இப்போதைய சென்சேஷன். மூதாட்டியின் வீடியோக்கள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் பெட்டி மெக்டோனால்ட். தன்னை ஒரு நேச்சுரல் ஸ்டார் என பெருமையாக குறிப்பிடுகிறார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications