அமெரிக்காவை அடிபணிய வைத்த சிறுமியின் ஒற்றை போட்டோ.. உக்ரைன் போரை நிறுத்துமா இந்த கண்ணீர் காட்சி?
கிவி: உக்ரைனில் நடந்து வரும் போரால், தந்தையைப் பிரிந்து செல்லும் மகளின் கண்ணீர் வீடியோ இணையம் முழுதும் பலரது இதயங்களை கணக்கச் செய்துள்ளது. வியட்நாமில் ஒரு புகைப்படம் போரை நிறுத்தியதுபோல், இந்த சிறுமியின் கண்ணீர் வீடியோ ரஷ்யாவின் மனதைக் கரைக்குமா என்பதே பலரின் ஏக்கமாக இருக்கிறது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. நேட்டோ நாடுகள் உதவும் என்று உக்ரைன் நினைத்திருந்த நேரத்தில், தாங்கள் தனித்து விடப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 16 வயது முதக் 60 வயது வரையிலான ஆண்கள், போர் சூழலில் நாட்டை விட்டு வெளியேறாமல், ராணுவ பணிகளில் ஈடுபட வேண்டும் என்று உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்நாட்டு ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் இருக்கும் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பான இடம் தேடி பயணித்து வருகிறார்கள். இந்த சூழலில், உக்ரேன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மகளையும் மனைவியையும் வழியனுப்பி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பேருந்தில் ஏற்றிவிடும் போது மகள் தந்த கடிதத்தைப் பிரித்துப்பார்த்து கண்ணீர் வடிக்கும் தந்தையின் பாசப்போராட்டத்தை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

பாசப் போராட்டம்
இந்த போரால், தன் மகளை இனியும் காண்போமா என்ற தந்தையின் தவிப்பும்,
தந்தையைப் பிரியும் மகளின் ஏக்கமும் அவர்களின் பாசமும் அங்கு கண்ணீரால் நனையும் போது, இந்த போர் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை போல், போரால் உறவுகளை இழக்கும் வலிகளும் கண்முன்னே வந்து போகிறது. தந்தையும் மகளும் கண்ணீரால் பிரியாவிடை கொடுக்கும் வீடியோவைப் பார்க்கும் எல்லோர் மனதையும் கரைத்துவிடுகிறது. போரின் கோரத்தை உணர்த்துகிறது. நடந்துகொண்டிருக்கும் இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த வீடியோவால் முடியும்.

வீடியோ
இந்த வீடியோ எப்படி போரை நிறுத்தும் என்று கேட்டீர்களானால், உங்களுக்கு வியட்நாம் போரை நினைவுபடுத்த வேண்டும். ஒரு புகைப்படம்.. ஒரே ஒரு புகைப்படம் வியட்நாமில் நடந்துகொண்டிருந்த போரை முடிவுக்கு கொண்டுவந்தது. அந்த மாதிரி ஒரு மாயாஜாலத்தை இந்த வீடியோ நிகழ்த்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் உலக அமைதியை விரும்பும் எல்லோரின் எண்ணமாக இருக்கிறது. அது நிகழுமா.. ரஷ்யா அதை செய்யுமா என்பது தான் ஒரே கேள்வியாக இருக்கிறது.

வியட்நாம் போர்
1954-ல் வடக்கு வியட்நாம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கொண்டது. அதன் பிறகு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்திருந்த வியட்நாமை சேர்த்து ஆள வடக்கு வியட்நாம் நினைத்து போர் புரிந்தது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இந்த போர் நடந்தது. 1972ம் ஆண்டு பெட்ரோலிய ரசாயனம் கொண்ட நாப்பாம் குண்டினை தெற்கு வியட்நாமில் இருந்த 'தராங்பாங்க்' என்ற கிராமத்தில் வீசியது. அப்போது பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) என்ற எட்டு வயது சிறுமி உடலில் தீக்காயங்களுடன் நிர்வாணமாக ஓடி வந்தாள்.

போர் நிறுத்தம்
சிறுமி ஓடி வருவதை அதைஅசோசியேட்டட் பிரஸ்சின் புகைப்பட பத்திரிகையாளர் நிக் வுட் (Nick Ut) புகைப்படம் எடுத்தார். சிறுமி நிர்வாணமாக இருப்பதால் அந்த பத்திரிக்கை அதை பிரசுரிக்க மறுத்துவிட்டனர்.அதன்பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் சிறுமியின் படத்தை பிரசுரித்தது. இதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உலகில் இருந்த அத்தனைப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் போருக்கு எதிரான படமாக அடையாளப்படுத்தப்பட்டது. இந்த புகைப்படத்தால், அமெரிக்க ராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறியது. அதன்பிறகு வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications