For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவர்ச்சி + சர்ச்சை மாடல் குவான்டீல் பலூச்சுடன் போஸ் கொடுத்து "சிக்கி"ய பாகிஸ்தான் மத குரு!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த மத குரு ஒருவர், கவர்ச்சி மாடல் அழகி குவான்டீல் பலூச்சுடன் சிரித்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2 இஸ்லாமிய மத அமைப்புகளிலிருந்து அவரை தற்காலிகமாக நீக்கியுள்ளனர். அவரும், பலூச்சும் சிரித்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து அந்த மத குருவுக்கு சி்க்கல் உருவானது.

Pak govt suspends cleric over the pose with model Baloch
Image credit: Facebook
Pak govt suspends cleric over the pose with model Baloch

இதுகுறித்து பாகிஸ்தான் மத விவகாரத்துறை அமைச்சர் சர்தார் யூசுப், சம்பந்தப்பட்ட மதகுரு முப்தி அப்துல் குவாவியை, ரூயத் இல ஹிலால் கமிட்டி மற்றும் தேசிய முஷாயிக் கவுன்சில் ஆகியவற்றின் உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு முடுக்கி விட்டுள்ளது. இறுதி முடிவு எடுக்கப்படும் வரை முக்கிய நிகழ்ச்சிகள் எதிலும் குவாவி பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குவான்டீல் பலூச் கவர்ச்சி மாடல் அழகி ஆவார். பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருபவர். நமது பிரதமர் மோடியையும் சரமாரியாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pak govt has suspended a cleric over the pose with model Qanteel Baloch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X