For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அந்த டேட்டாவை கொடுங்க.. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கைகோர்த்த பாக்! உஷார் நிலையில் 22 புள்ளிகள்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: சர்வதேச அளவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் முக்கிய டேட்டாக்களை பாகிஸ்தான் சீனாவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் நடைபெற்றதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் சலசலப்பு நீடித்து வருகிறது. இதனையடுத்து தற்போது அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள டோக்லம் பகுதியிலும் இரு நாட்டு வீரர்கள் மோதிக்கொண்டனர். எனவே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. முன்னர் பாகிஸ்தான், சீனா என இரண்டு நாடுகள் எதிரணியில் இருந்த நிலையில் தற்போது சீனாவுடன் பாகிஸ்தான் கைகோர்த்திருக்கிறது.

15,610 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு கேபினட் ஒப்புதல்.. 'செம’ அப்டேட் சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு 15,610 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு கேபினட் ஒப்புதல்.. 'செம’ அப்டேட் சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு

இதனை முன்னரே கணித்த இந்திய ராணுவம் தனது பாதுகாப்பை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பாகிஸ்தானுடைய எல்லையை பலப்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 2,289 கி.மீ தொலைவு இருக்கிறது. இதில் 192 நீளமுள்ள பகுதியை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த பகுதி முழுவதிலும் எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கப்படலாம்.

எல்லையை பலப்படுத்தும் இந்தியா

எல்லையை பலப்படுத்தும் இந்தியா

எனவே இந்த பகுதிகளை பலப்படுத்தும் பணிகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் செய்து வருகின்றனர். இதில் ஏற்கெனவே 26 கி.மீ நீளத்திற்கு எல்லை பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள 33 கி.மீ நீளம் இரண்டாவது கட்டமாக பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் டிசிபிகளை (ditch-cum-bandhs)உருவாக்குதல், சேதமடைந்திருக்கும் தடுப்பு வேலி கம்பிகளை சரி செய்தல், டாங்கிகள் முன்னோக்கி செல்வதற்கான தடுப்பு கவசங்கள் (morchas) போன்றவை உருவாக்கப்படுகின்றன. மட்டுமல்லாது சுமார் 500 கி.மீ தொலைவு வரை எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் 'பிரளய்' ரக ஏவுகணைகளையும் நிலை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

பிரளய்

பிரளய்

இந்த ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பதால் இதன் முழு விவரம் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தெரியாது. இதனை கொண்டு பதுங்கு குழிகளையும், டாங்கிகளையும் 100% முழுமையாக அழித்துவிட முடியும். ஆனால் இது தரையில் உள்ள இலக்குகளைதான் தாக்கும். இதன் வேகம் சுமார் 2,000 கி.மீ அளவில் இருக்கும். இவ்வளவு வேகத்தையும் 1,000 கி.லோ வெடிபொருட்களுடன் இந்த ஏவுகணையால் எட்ட முடியும். மட்டுமல்லாது இது குறைந்தபட்சம் 150 தொலைவு தொடங்கி சுமார் 500 கி.மீ வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும். இந்த ஏவுகணை தாக்கிய இடத்தில் 10 மீட்டர் அளவில் எதுவும் இருக்காது என்பதுதான் இதன் ஸ்பெஷல்.

ஏவுகணை சோதனை

ஏவுகணை சோதனை

அதுபோல மற்றொருபுறம் சுகோய் விமானத்திலிருந்து 'பிரமோஸ்' ஏவுகணையை இந்திய விமானப்படை பரிசோதித்து பார்த்திருக்கிறது. பிரமோஸ் ஏவுகணையை சுகோய் விமானத்திலிருந்து பரிசோதனை செய்வது இதுவே முதல்முறை. என்னதான் ரஃபேல் தற்போது வந்திருந்தாலும், அதன் அதிகபட்ச வேகம் 1,192 கி.மீ தான். ஆனால் சுகோய் விமானத்தின் வேகம் 2,120 கி.மீ. இதுதான் தற்போது பாகிஸ்தானுக்கு பெரும் உறுத்தலாக இருக்கிறது. இந்த விமானத்தின் திறன் ஒருபுறம் எனில், பிரமோஸ் ஏவுகணையின் திறன் மறுபுறம். இந்த ஏவுகணையால் வானிலிருந்து மற்றொரு விமானத்தை தாக்கி அழிக்க முடியும். அதேபோல கடலிலும், தரையிலும் உள்ள இலக்கை தாக்கி அழிக்க முடியும்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இதையெல்லாம் பார்த்து மிரண்டுள்ள பாகிஸ்தான் தற்போது சீனாவிடம் உதவி கேட்டிருக்கிறது. அதாவது பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (SUPARCO) சீனாவுடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு சீனா அதிநவீன செயற்கைக்கோள் படங்களை கொடுக்கும். தற்போது நாம் கூகுள் மேப்பில் பார்க்கும் வரைபடங்களில் 5 மீட்டர் இடைவெளியில் உள்ள பொருட்கள் மட்டுமே தெரியும். ஆனால், வெளி சந்தையில் கிடைக்கும் வரைபடங்கள் 3 மீட்டர் இடைவெளியில் உள்ள பொருட்களை கூட நமக்கு தெளிவாக காட்டும். அதிலும் சீனா செயற்கைக்கோள்கள் மூலம் 0.6 மீட்டர் தெளிவுத்திறன் கொண்ட வரைபடங்களை பெற முடியும்.

22 விமான தளங்கள்

22 விமான தளங்கள்

பாகிஸ்தான் தற்போது இந்த படங்களைதான் கேட்டிருக்கிறது. அதாவது இந்தியாவின் எல்லையில் உள்ள 22 போர் விமான தளங்கள் குறித்த விவரங்கள் பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. ஒரு வேளை பாகிஸ்தானின் இலக்கு இந்திய விமானப்படை தளமாகக்கூட இருக்கலாம். பாகிஸ்தான் கோரியுள்ள மேப்பில் இந்தியாவின் ஸ்ரீநகர், அடம்பூர், அம்பாலா, பதிண்டா, சிர்சா மற்றும் புஜ் போன்ற மிக முக்கிய விமானத்தளங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
While there is a continuous conflict between China and India at the international level, there are reports that Pakistan has requested important data of the Indian Army from China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X