For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரமாமிசத்தை “சிக்கன்” போல் சாப்பிட்ட பாக். சகோதரர்கள் – 12 ஆண்டுகள் சிறை

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நரமாமிசம் தின்ற சகோதரர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி.

சகோதரர்கள் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

நரமாமிச சகோதரர்கள்:

இதனையடுத்து, அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது, குழியில் இருந்து தோண்டிய பிணங்களை சகோதரர்கள் இருவரும் பச்சையாகத் தின்றதாக தெரியவந்தது.

போலீஸார் கைது:

கடந்த 2011 ஆம் ஆண்டு அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர்.

குழந்தை தலை:

தண்டனை காலம் முடிந்து 2013 இல் விடுதலையான இவர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு சிறு குழந்தையின் தலையை சாப்பிட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

தனிச்சட்டம் இல்லை:

பாகிஸ்தானில் நரமாமிசம் தின்பவர்களை தண்டிக்க தனிச்சட்டம் ஏதும் இல்லாததால், அவர்கள் மீது பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

கடுமையான தண்டனை:

ஏற்கனவே, நரமாமிசம் தின்ற வழக்கில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை அனுபவித்துள்ளதால் இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை மிககடுமையானதாக இருக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர்.

12 ஆண்டுகள் சிறை:

இதனையடுத்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த கோர்ட், இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

English summary
Mohammad Farman Ali and Mohammad Arif Ali were arrested in April amid a public outcry after the head of a child was found in their house. They were found guilty of desecrating a grave, which is a criminal offence, and other charges. Pakistan has no law against cannibalism. The brothers had served two years in jail after being convicted of similar charges in 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X