பாரத் மாதா கீ ஜே முழக்கத்துடன்.. இந்திய மூவர்ண கொடி ஏந்தி.. உக்ரைனிலிருந்து தப்பும் பாக். மாணவர்கள்
கீவ்: போர் நடக்கும் உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மட்டுமின்றி பாகிஸ்தான், துருக்கி மாணவர்களுக்கும் இந்திய தேசியக்கொடி உதவி செய்துள்ளது. இதை பகிரங்கமாக பாகிஸ்தான் மாணவர் ஒருவர் அந்தநாட்டின் தொலைக்காட்சியில் கூறியுள்ளார். இது இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் உருக்குலைந்துள்ளது. ஏவுகணை, குண்டுவெடிப்பு தொடர்ந்து நிகழ்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

அண்டை நாடுகள்
உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில் இருந்து இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பி வருகின்றனர். உக்ரைனில் தொடர்ந்து போர் மேகங்கள் அதிகரிப்பதால் இந்த மீட்பு பணியை மத்திய அரசு விரைவுப்படுத்தியுள்ளது. மீட்பு பணிக்கான ஒருங்கிணைப்பு பணியை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜூ, விகே சிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய தேசியக் கொடி
இதற்கிடையே உக்ரைனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்புக்காக இந்திய தேசியக்கொடியுடன் வருகின்றனர். தேசிய கொடியுடன் வந்தால் ரஷ்ய ராணுவம் எதுவும் செய்வது இல்லை. இவர்கள் உக்ரைனை விட்டு ஓரளவுக்கு பத்திரமாக வெளியேறி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான், துருக்கி மாணவர்களும் இந்திய தேசியக்கொடியை பயன்படுத்தி வெளியேறி வருகின்றனர்.

பாகிஸ்தான் மாணவர் பேட்டி
இதை பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அந்நாட்டு மாணவர் ஒருவர் பகிரங்கமாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனில் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக வெளியேற முடிகிறது. இதனால் பாகிஸ்தான் மாணவ, மாணவியர் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாரத மாதா கீ ஜே எனக்கூறி எல்லையை அடைகின்றோம்'' என கூறியுள்ளார். இது இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video

இம்ரான் கான் மீது அதிருப்தி
இதற்கிடையே உக்ரைனில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் மாணவ, மாணவியரை மீட்க அந்த நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது அந்தநாட்டு மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், போரில் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் உக்ரைன் ராணுவத்தினர் இந்திய மாணவ மாணவிகளை தாக்கிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் இந்திய தேசியக் கொடிதான் தங்கள் நாட்டு தேசியக் கொடியை விட பாதுகாப்பானது என்று உணர்ந்துள்ளனர் பாகிஸ்தான் மாணவர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications