For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் வெப்சைட்டை ஹேக் செய்யுங்க ராசாக்களா: ஹேக்கர்களுக்கு பென்ட்டகன் அழைப்பு

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகன் தனது இணையதளத்தை ஹேக் செய்ய வருமாறு ஹேக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகன் தனது இணையதளத்தை யாரும் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு பலப்படுத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து 'ஹேக் தி பென்ட்டகன்' என்ற போட்டியை அறிவித்துள்ளது.

Pentagon invites hackers to attack its websites

அதாவது பென்ட்டகனின் இணையதளத்தை ஹேக் செய்ய வருமாறு ஹேக்கர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் ஹேக் செய்து அதில் உள்ள குறைகளை கண்டுபிடித்து கூறினால் அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும்.

எவ்வளவு பெரிய குறையை கண்டுபிடிக்கிறார்களோ பரிசும் அவ்வளவு பெரிதாக கிடைக்கும். குறைகளை கண்டுபிடித்து சரி செய்துவிட்டால் பென்ட்டகன் இணையதளம் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அமெரிக்க அரசின் பிற துறைகளின் இணையதளங்களையும் ஹேக் செய்யும் போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்களின் இணையதளங்களை யாரும் ஹேக் செய்யாமல் இருக்க ஹேக்கிங் போட்டிகளை நடத்தி வரும் நிலையில் பென்ட்டகனும் அதே போட்டியை நடத்துகிறது.

English summary
Pentagon has invited the hackers to attack its website. This programme is titled 'Hack the Pentagon'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X