பொருளாதார தடை போட்ட யுஎஸ்..புடினிடம் பேசிய மோடி.. ம்ஹூம்.. ரஷ்யா மசியவில்லை! ”கிவ்” மீது குண்டுமழை
கிவ் : உக்ரைன் தலைநகர் கிவ் மீது இரண்டாம் நாள் தாக்குதலை ரஷ்ய ராணுவம் தொடங்கியுள்ள நிலையில் தலைநகரை கைப்பற்றி உக்ரைன் அரசைக் கவிழ்ப்பதே ரஷ்யாவின் நோக்கமாக உள்ளது என அமெரிக்க மற்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Recommended Video
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா வியாழன் அன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் தொடங்கியது.
தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக சுமார் 100,000 பேர் நகரங்களை விட்டு ஓடிவிட்டனர்.

கண்டுகொள்ளாத ரஷ்யா
ரஷ்யா மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ள நிலையிலும் இரண்டாம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் இரண்டாம் நாள் தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்று போலவே இன்றும் தரைவழி, கடல்வழி, வான்வழி என மும்முனைத் தாக்குதல் தலைநகரான கிவ் நகரம் சிதைந்து போயுள்ளது. பல முனைகளில் இருந்து குண்டு மழை பொழிந்து வரும் ரஷ்ய ராணுவத்தினரால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

2ஆம் நாள் தாக்குதல்
உக்ரைன் மீதான 2ம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர். தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரேனிய அதிகாரிகள், ரஷ்யா கிவ்வைக் கைப்பற்றி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறுகின்றனர்.

மும்முனை தாக்குதல்
தரைவழி, கடல் வழி, வான் வழி என மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது. கட்டிடங்கள், விமான நிலையங்கள், ராணுவ தளங்கள் போன்றவை ஏவுகணைகளின் தாக்குதலில் பற்றி எரிந்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி வருகின்றனர். இரண்டாம் நாளாக போரை தொடங்கியுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்கின்றனர்.

மக்கள் தஞ்சம்
இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து உள்ளனர். குண்டுவீச்சில் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. அதில் இருந்தவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இனிமேல் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஏடிஎம் மையங்களிலும், கடைகளிலும் குவிந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவுடனான முதல்நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாகவும், போரில் நாங்கள் தனித்து விடப்பட்டு உள்ளோம் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
-
குவைத், பஹ்ரைன் மீது சரமாரி தாக்குதள்.. ஈரானின் வெறியாட்டம்.. CENTCOM கொடுத்த பகீர் அறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications