இனி ஹார்முஸ் எங்களுடையது.. ஈரானால் ஒரு இன்ச் கூட நகர முடியாது.. பீட் ஹெக்செத் வார்னிங்
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், ஹார்முஸ் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க கடற்படை முழுமையாக கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளார். ஈரானிடம் தற்போது அமெரிக்க கடற்படையை எதிர்த்து போராடும் வகையில் கடற்படை இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணம் என்று அவர் வாஷிங்டனில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த வழித்தடத்தில் அமெரிக்கா தொடர்ந்து தடையை நடைமுறைப்படுத்தும் என்றும், தேவைப்பட்டால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அதை நீட்டிக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஈரான் ஒரு ஒப்பந்தத்துக்கு உடன்படாவிட்டால், அமெரிக்க படைகள் மீண்டும் போர் நடவடிக்கையைத் தொடங்க தயாராக உள்ளதாக ஹெக்செத் தெரிவித்தார். ஈரான் தனது ராணுவ உபகரணங்களை எங்கு நகர்த்துகிறது என்பதை அமெரிக்கா துல்லியமாக அறிந்துள்ளதாகவும், "நாங்கள் உங்களை கவனித்து வருகிறோம்" என்று நேரடியாக எச்சரித்தார். இந்த அறிவிப்பு ஈரானுக்கு மிகப்பெரிய வார்னிங் ஆக அமைந்துள்ளது.
அமெரிக்க கடற்படை ஈரானுக்கு செல்லும் அல்லது ஈரானில் இருந்து வரும் கப்பல்கள் அனைத்தும் "தடை செய்யப்பட்ட பொருட்கள்" (contraband) ஏற்றிச் செல்கின்றனவா என சோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கப்பல்கள் எங்கு இருந்தாலும் அவற்றை நிறுத்தி, பரிசோதித்து, பறிமுதல் செய்யும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்களில் ஆயுதங்கள், ஆயுத அமைப்புகள், தோட்டாக்கள், அணு பொருட்கள், கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள், இரும்பு, எஃகு மற்றும் அலுமினியம் ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கை ஈரானின் ஏற்றுமதியை மொத்தமாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெக்செத் மேலும் கூறியதாவது, அமெரிக்கா தனது ஆயுத இருப்பை முன்பை விட அதிகமாக அதிகரித்து வருகிறது என்றார். ஈரானின் எண்ணெய் தொழில் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்காவின் தடை நடவடிக்கை காரணமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பெருமளவு குறைந்துள்ளது. இது உலக சந்தையில் எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
ஹெக்செத் உடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்மட்ட அமெரிக்க தளபதி டான் கெய்ன், ஈரானுக்கு உதவும் எந்த கப்பலையும் உள்ளே நுழையவிடாது, அமெரிக்க கடற்படை தடைகளை தாண்டி சென்றால் துரத்தி சென்று தாக்கும். ஈரான் எண்ணெயை ஏற்றிச் செல்லும் இருண்ட கப்பல்கள் (dark fleet) உட்பட அனைத்தும் இதில் அடங்கும்.
இதுவரை 13 கப்பல்கள் தடை காரணமாக தங்கள் பாதையை மாற்றி திரும்பிச் சென்றுள்ளன. ஆனால் அமெரிக்க ராணுவம் இதுவரை எந்த கப்பலையும் ஏறி பரிசோதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் பாதையில் இந்த தடையை நடைமுறைப்படுத்த பிற நாடுகளும் உதவி வரலாம் என்று ஹெக்செத் தெரிவித்தார். இது அமெரிக்கா மட்டும் தனியாக செயல்பட விரும்பவில்லை என்பதையும், தனக்கு ஆதாரவமாக எந்தெந்தா நாடுகள் வருகிறது என்பதை சோதிக்கும் காலமாகவும் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த முக்கிய பாதையில் அமைதி நிலவும் என பீட் ஹெக்செத்
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications