For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசிய விமானம்: 17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நிகழ்ந்த இன்னொரு விபத்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Plane crash shares anniversary with '96 crash
மாஸ்கோ: மலேசிய விமானம் உக்ரைன் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானதில் 298 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த விமான விபத்து போல் 17 ஆண்டுகளுக்கு முன்னர் (17-07-1996ல்) இதே போல ஒரு விமானம் வெடித்து சிதறி விபத்துகுள்ளானது.

1996 ல் வெடித்த விமானம்

டிரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன்ஸ் விமானம் (TWA Flight 800) 1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அமெரிக்காவின் ஜே.எஃப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரீஸுக்கு கிளம்பியது.

230 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் நியூயார்க் அருகே கிழக்கு மோரிசஸ் அட்லாண்டிக் கடற்கரை பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர். எரிபொருள் டேங்க் வெடித்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்று 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அந்த விமான சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது.

அந்த விமானம் கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் ஏவுகணையின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் 280 பயணிகள் 15 சிப்பந்திகள் என அந்த விமானத்தில் பயணித்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர்.

17 ஆண்டுகளுக்குப் பின் அதேநாளில் ஏற்பட்ட விபத்து உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Oddly, Yesterday's crash of a Malaysia Airlines Flight 17 shares a date with another major airline disaster, the crash of TWA Flight 800 over Long Island on July 17, 1996.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X