அணுகுண்டு இருக்கு.. மோடி விஷயத்தில் இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்..திடீர் பல்டி-ஒரே கதறல்
இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடியை கசாப்புக்கடைக்காரர் என அவதூறான வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம் செய்தது தொடர்பாக இருநாட்டு தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ‛‛அணுகுண்டு இருக்கு மறந்துவிடாதீங்க'' என இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பெண் அமைச்சர் ஷாஜியா அட்டா மாரி தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவில் இருந்த பிரிந்து சென்ற பாகிஸ்தான், இந்தியாவின் காஷ்மீரின் ஒருபகுதிக்கு உரிமை கொண்டாடி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது வெடித்து வருகின்றன.

ஐநா பாதுகாப்பு சபை
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா ஐநா பாதுகாப்பு சபையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்கு எதிராக பேசினார். அவர் பேசும்போது, ‛‛காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. காஷ்மீர் தொடர்பாக ஐநா சபையில் இந்தியா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

இந்தியா பதிலடி
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார். அப்போது, ‛இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளது. அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் இதுபற்றி பேச வேண்டாம்'' என விளாசினார். இந்நிலையில் இருநாட்டு தலைவர்கள் இடையே தற்போது கருத்து மோதல் நடந்து வருகிறது.

பிரதமர் மோடி மீது விமர்சனம்
அதன்பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்தார். அப்போது, ‛‛ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால் இந்தியாவின் பிரதமரான குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். பிரதமர் மோடியை நுழைய அமெரிக்க தடை விதித்து இருந்தது. பிரதமர் மோடி ஹிட்லரின் நாசி கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்'' என கடும் வார்த்தைகளால் விமர்சித்தார். இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் நேற்று நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். பிலாவல் பூட்டோ சர்தாரியின் போட்டோக்களை அவர்கள் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியா பதிலடி
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்த நாடு தான் பாகிஸ்தான். லக்வி, ஹபீஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் என ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு பாகிஸ்தான். ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட 27 பயங்கரவாத அமைப்புகளை செயல்பட அனுமதித்திருக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு" என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கு அணுகுண்டு மிரட்டல்
இதன் தொடர்ச்சியாக தான் பாகிஸ்தானின் அமைச்சர் இந்தியாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக பாகிஸ்தான் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர ஷாசியா அட்டா மாரி, ‛‛பாகிஸ்தானில் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்கள் அணுஆயதங்கள் வெறுமனே அமைதியாக வைப்பதற்கு அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பயன்படுத்துவதில் இருந்து பின்வாங்க மாட்டோம்'' என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

அந்தர் பல்டி அடித்த பெண் அமைச்சர்
இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில் தற்போது பாகிஸ்தான் அமைசசர் ஷாசியா அட்டா மாரி பல்டி அடித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛பாகிஸ்தான் பொறுப்புள்ள அணுசக்தி நாடு. இந்திய ஊடகங்களில் சில பீதியை உருவாக்க முயல்கின்றன. இந்திய அமைச்சரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவை விட பாகிஸ்தான் தான் அதிகம் தியாகம் செய்துள்ளது. மோடி அரசு பயங்கரவாதம் மற்றும் பாசிசத்தை ஊக்குவிக்கிறது'' என கூறியுள்ளார். ***
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications