நான் ரொம்ப அழகு.. அதான் அரெஸ்ட் பண்றாங்க! பலாத்காரம் செய்ய முயற்சி - அமெரிக்காவில் கைதான பெண் பரபர
கலிஃபோர்னியா: உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில், தான் அழகாக இருப்பதன் காரணமாகவே போலீசார் தன்னை கைது செய்ததாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய அவர்கள் முயற்சி செய்ததாகவும் கைதான பெண் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு விமான நிலையத்தின் உணவகத்தில் 28 வயதான ஹெந்த் புஸ்தாமி என்ற பெண் சாப்பிட்டுவிட்டு பணம் செலுத்தாமல் சென்று இருக்கிறார்.
இதனை கண்டுபிடித்த உணவக நிர்வாகம் காவல்துறைக்கு புகார் அளித்து இருக்கிறது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன் அந்த பெண்ணை தேடினர்.

பெண் கைது
அப்போது அந்த 28 வயது பெண் அப்பகுதியில் இருக்கும் பாதுகாப்பு சோதனைச்சாவடி அருகே அவர்களின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உறங்கிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் ஹெந்த் புஸ்தாமியை கைது செய்ய முயன்றனர். ஆனால், அவர் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடித்ததாக கூறப்படுகிறது.

அழகாக இருப்பதால் கைது
அவரை கைது செய்த போலீசார் பதிவு செய்த வழக்கு அறிக்கையில், கைது செய்யும் நேரத்தில் ஹெந்த் புஸ்தாமி நிதானமாக இருக்கவில்லை எனவும், போலீசாருடன் அவர் சண்டையிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து புஸ்தாமி தெரிவிக்கையில், "என்னை விட அழகான பெண்களை போலீசார் பார்த்தது இல்லை. அதனால் அவர்களை என்னை கைது செய்து துன்புறுத்தினார்கள்." என்றார்.

ஏற்கனவே ஒரு வழக்கு
இந்த நிலையில் புஸ்தாமி குறித்து கூடுதல் விசாரணை மேற்கொண்டபோது லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் அவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. தன்னை கைது செய்த காவல்துறையினர் மீது எச்சில் துப்புவேன் என்று புஸ்தாமி மிரட்டியதாகவும் அவர்கள் தனது வழக்கில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

பலாத்கார புகார்
அதே நேரம், காவல்துறையினர் பாலியல் வக்கிர குணம் படைத்தவர்கள் என்றும், தன்னை பலாத்காரம் செய்ய அவர்கள் முயற்சித்ததாகவும், தன்னை போல அழகான பெண்களை அவர்கள் இதற்கு முன் பார்த்ததே இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இதனிடையே ஹெத் புஸ்தாமி தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications