Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் உடலுக்கு இன்று இறுதிசடங்கு.. 5 நாள் அஞ்சலிக்கு பின் நல் அடக்கம்!

Subscribe to Oneindia Tamil

வாட்டிகன்: உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31ம் தேதி மரணம் அடைந்தார். இவரது உடல் 5 நாட்களாக இத்தாலி அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், உலகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று 16ம் பெனடிக்ட் இறுதி சடங்குகள் நடக்க உள்ளது.

கத்தோலிக்க மதத் தலைவராக போப் ஆண்டவர் செயல்பட்டு வருகிறார். இத்தாலியின் வாட்டிகன் நகரில் போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுபவர்கள் வசிப்பர். தற்போது போப் ஆண்டவராக பிரான்சிஸ் உள்ளார்.

இவருக்கு முன்பு போப் ஆண்டவராக இருந்தவர் 16ம் பெனடிக்ட். ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். 2005 ஏப்ரல் மாதம் 19ம் தேதி போப் ஆண்டவராக பதவியேற்றபோது அவர் தனது பெயரை 16ம் பெனடிக்ட் என மாற்றம் செய்து கொண்டார்.

யார் இந்த பெனடிக்ட்?

யார் இந்த பெனடிக்ட்?

2005ல் போப் ஆண்டவராக பதவியேற்ற 16ம் பெனடிக்ட் ஏறக்குறைய 8 ஆண்டுகள் வரை அந்த பதவியில் இருந்தார். அதன்பிறகு 2013 பிப்ரவரி 28 ல் போப் பதவியை ராஜினாமா செய்தார். இவர் வயது முதிர்வால் உடல்நல பிரச்சனையை சந்தித்து வந்த நிலையில் போப் பதவியை துறந்தார். அதன்பிறகு அவர் வாட்டிகன் நகரில் உள்ள மேட்டர் எக்லேசியா ஆலயத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார்.

பதவியை துறந்த பெனடிக்

பதவியை துறந்த பெனடிக்

95 வயது நிரம்பிய நிலையில் 16ம் பெனடிக்ட் வயது முதிர்வால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் முன்னாள் போப் 16ம் பெனடிக் உடல் நலக்குறைவால் டிசம்பர் 31ம் தேதி காலமானார். பொதுவாக போப் ஆண்டவராக இருப்பவர்கள் தங்களின் மரணம் வரை பதவியில் நீடிப்பார்கள். ஆனால் தற்போது காலமான 16ம் பெனடிக்ட் முன்கூட்டியே பதவியை 2013ல் துறந்தார். இவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று இறுதிசடங்கு

இன்று இறுதிசடங்கு

மறைந்த 16ம் பெனடிக்ட் உடல் வாட்டிகன் அரண்மனையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். 5 நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போப் ஆண்டவர் 16ம் பெனடிக்டின் இறுதி சடங்குகள் வாடிகன் தேவாலயத்தில் இன்று நடக்கிறது.

பாதிரியார்கள் பங்கேற்பு

பாதிரியார்கள் பங்கேற்பு

அடக்க திருப்பலிக்கு பின்னர் அவரது உடல், சைப்ரஸ் மர பெட்டிக்குள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. அந்த பெட்டிக்குள் போப்பாண்டவரின் சின்னம், அவரது உருவம் பொறித்த பதக்கங்கள் உள்ளிட்டவையும் வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பாதிரியார்கள், ஆயர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+