For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்தான்புல்லின் பிரபல "ப்ளூ" மசூதியில் தலை வணங்கி பிரார்த்தித்த போப்பாண்டவர்!

By Siva
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: துருக்கியில் சுற்றுப்பயணம் செய்த போப் பிரான்சிஸ் இஸ்தான்புல் நகரில் உள்ள மசூதியில் பிரார்த்தனை செய்தார்.

போப் பிரான்சிஸ் துருக்கியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை அவர் இஸ்தான்புல் நகரில் இருக்கும் மிகப்பெரிய ப்ளூ மசூதிக்கு சென்றார். மசூதியின் நுழைவாயிலில் அவர் தனது காலணிகளை கழற்றிவிட்டார். மசூதிக்குள் அவர் மக்காவை நோக்கி இஸ்தான்புலின் இஸ்லாமிய தலைவர் முப்தி ரஹ்மி யாரன் அருகில் நின்று தலையை குனிந்து சில நிமிடங்கள் மவுனமாக பிரார்த்தனை செய்தார்.

Pope Francis prays alongside Grand Mufti in Istanbul’s Blue Mosque

மசூதியில் போப் பிரார்த்தனை செய்ததை மக்கள் போலீஸார் அமைத்த தடுப்பு வேலிக்கு பின்னால் நின்று பார்த்தனர். முன்னதாக 2006ம் ஆண்டு போப் பெனடிக்ட் மசூதிக்கு சென்றதை பல கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், சில முஸ்லீம்களும் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மசூதிக்கு சென்ற பிறகு அவர் அருகில் உள்ள அயா சோபியா அருங்காட்சியகத்திற்கு சென்றார். அந்த அருங்காட்சியகம் ஒரு காலத்தில் கிறிஸ்தவ தேவாலயமாக இருந்தது.

போப் அருங்காட்சியகத்திற்கு சென்றபோது வழியில் நின்ற பள்ளிக் குழந்தைகள் துருக்கிய மற்றும் வாட்டிகன் கொடிகளை அசைத்து அவரை வரவேற்றனர்.

ப்ளூ மசூதியின் அதிகாரப்பூர்வமான பெயர் சுல்தான் அகமது மசூதி ஆகும். 1616ம் ஆண்டு திறக்கப்பட்ட அந்த மசூதி துருக்கியில் மிகவும் பிரபலமானது. மசூதிக்குள் உள்ள நீல நிற இஸ்னிக் டைல்ஸால் அது ப்ளூ மசூதி என்று அழைக்கப்படுகிறது.

English summary
Pope Francis on saturday visited Turkey's most popular Blue mosque in Instanbul and prayed there for few minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X