For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் தற்போதைய தேவை கருணை... போப் பிரான்சிஸ் கிறுஸ்துமஸ் நற்செய்தி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாடிகன்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள் கிறிஸ்தவர்களால் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிகனில் போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அகதிகளாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுடன் போப், தொலைபேசியில் உரையாடினார். அவர்கள் படும் கஷ்டம் தனக்கு தெரியும் என்றும், ஈராக்கிலுள்ள கிறிஸ்தவ அகதிகள் தனது நெஞ்சத்துக்கு அருகிலேயே இருப்பதாகவும் உருக்கமாக போப் தெரிவித்தார்.

Pope Francis urges 'tenderness' as millions celebrate Christmas

பின்னர், உலகப் புகழ்பெற்ற வாடிகன் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் கலந்துகொண்டு மக்களுகு ஆசி வழங்கினார். கருணையும் பொறுமையும் கடவுளை அடைவதற்கான வழி என்று போப் பிரான்சிஸ் கூறினார்.

உலத்தில் கருணை தற்போதைய தேவையாக இருக்கிறது. ஆண்டவரின் ஔியை ஏற்க மக்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் ஊழலும், இருளும் மண்டிக்கிடக்கின்றன. அமைதி என்ற ஒளியை வைத்தே நாம் அவற்றை அகற்ற வேண்டும் என்று போப் தெரிவித்தார்.

பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கலந்துகொண்டு திருப்பலி பாடல்களை பாடினர். பல்வேறு நாடுகளில் வந்திருந்த ஏராளமானோர் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

English summary
Pope Francis led Christmas Eve mass in the Vatican calling for "tenderness" and "warmth" after a violence-plagued year as millions of Christians began marking the holiday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X