நம்ம ஊரு எடப்பாடி மாதிரியே நம்பிக்கை தீர்மானத்தில் ஜம்மென்று ஜெயித்த ஜூமா!
தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் ஜூமா வெற்றி பெற்றார்.
Subscribe to Oneindia Tamil
கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் ஜூமா வெற்றி பெற்றார்.
தென்னாப்பிரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜேக்கப் ஜூமா 75 வயதான அதிபர் ஜூமா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

எனவே ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி எம்பிக்களே அவர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் பதவி விலக கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக ஜூமா மறுத்து விட்டார்.
எனவே அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
ரகசிய முறையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 198 வாக்குகள் பெற்று ஜூமா மீண்டும் பதவியை தக்க வைத்துக்கொண்டார். எதிர்க்கட்சிகள் 177 வாக்குகளை பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications