இரு நாட்டு பிரதமர்கள்.. ஆனாலும் இந்தியர்கள்! ரிஷி சுனக் - மோடி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு
ஜகார்டா: இந்தோனேசியாவில் இன்று தொடங்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
G 20 நாடுகளின் 17 வது மாநாடு இந்தோனோசியாவின் பாலி நகரில் இன்று தொடங்குகிறது. நவம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
இதில் பங்கேற்கும் உலக நாடுகளில் தலைவர்கள் உலகில் நிலவும் பல்வேறு முக்கிய விவகாரங்கள், பொருளாதாரம், பருவ நிலை, போர்கள், சர்வதேச பயங்கரவாதம் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

ஜி 20 மாநாடு
குறிப்பாக, விவசாயம், சுற்றுச்சூழல், சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் ஆகிய 3 தலைப்புகளின் கீழ் இந்த ஜி 20 மாநாட்டில் மூன்று அமர்வுகள் நடைபெற உள்ளன. உலக தலைவர்கள் இந்த தலைப்புகளின் கீழ் விரிவாக விவாதிக்க உள்ளார்கள். ஜி 20 நாடுகள் குழுவில் இடம்பெற்று இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு செல்கிறார்.

இரு தரப்பு பேச்சுவார்த்தை
ஜி 20 நாடுகள் மாநாட்டிற்கு வரும் உலக நாடுகளின் தலைவர்கள், பங்கேற்பதுடன் அங்கு வரும் உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாநாட்டிலும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை உறுதியாகி உள்ளது.

மோடி - சுனக் சந்திப்பு
அதேபோல், பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். குறிப்பாக பிரிட்டன் பிரதமராக புதிதாக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மேக்ரானுடன் சந்திப்பு
அதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடனும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் இருநாட்டு நல்லுறவு, பொருளாதார உறவுகள் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவி விலகலை தொடர்ந்து பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதலிடத்தில் இருந்தார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்ட் இதில் போட்டியிடாமல் விலகியதை அடுத்து ரிஷி சுனக் கடந்த மாதம் பிரிட்டன் அதிபராக பதவியேற்றார்.

மோடி வாழ்த்து
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றவுடன் அவரை தொலைப்பேசியில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தினார். "ரிஷி சுனக்கிடம் பேசியது மகிழ்ச்சி. பிரிட்டன் பிரதமராக அவர் பதவியேற்றதற்கு வாழ்த்தினேன். இரு நாடுகள் இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவோம். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை தொடங்கும் பணிகளை நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை இருவரும் ஒப்புக்கொண்டோம்." என இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டார்.

ரிஷி சுனக் நன்றி
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த ரிஷி சுனக், "நான் என்னுடைய புதிய பொறுப்பை ஏற்றதற்காக நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்கு நன்றி. இந்தியாவும் பிரிட்டனும் பல விசயங்களை பகிர்ந்துகொள்கின்றன. அடுத்த சில மாதங்கள், ஆண்டுகளில் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் முக்கிய இடத்தை அடையும்." என்று கூறி இருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications