விடைபெற்ற கால்பந்து ரசிகர்கள்.. வெறிச்சோடிய கத்தார்! அரபு கலாச்சாரத்தை பூரிக்கும் உலக மக்கள்
தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து கத்தாரில் திரண்டிருந்த ரசிகர்கள் தங்கள் நாடுகளுக்கு பல்வேறு உணர்வுகளுடன் புறப்பட்டு சென்ற நிலையில் விழாக்கோலம் பூண்டிருந்த கத்தார் தற்போது அமைதியாகி உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கத்தாரில் தொடங்கிய பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி 30 மாதம் நடைபெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியோடு நிறைவடைந்தது.
இதில் 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜெண்டினா பெற்று கோப்பையை வென்றதை தொடர்ந்து அந்நாட்டு வீரர்களும் தலைநகர் தோஹாவில் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ஊர்வலமாக சென்றனர்.

அர்ஜெண்டினா ரசிகர்கள்
இப்படி வெற்றிக்களிப்பில் அர்ஜெண்டினா ரசிகர்கள் தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்கள், சாலைகள், கடைகள், மால்களில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தனர். பலரும் ஆனந்த கண்ணீரில் மிதந்தனர். "எனக்கு 62 வயது நான் மாரடோனா, மரியோ கெம்பஸ் உலகக்கோப்பையை வென்றதை பார்த்து இருக்கிறேன். ஆனால், இதுதான் மிகச்சிறந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி." என்கிறார் அண்டோனியோ லேபெஸ் என்ற ரசிகர்.

மது போதை இல்லை
மரியான்னா கிப்ஸ் என்ற ரசிகர் பேசுகையில், "நான் இந்த மகிழ்ச்சியில் மது போதையில் இருந்திருப்பேன். ஆனால், இங்கு எனக்கு மது எப்படி கிடைக்கும்? இந்த போட்டியே எங்களுக்கு மிகப்பெரிய பயணமாக அமைந்தது." என்றார். பொதுவாக கால்பந்து போட்டிகளில் ரசிகர்கள் மோதிக்கொள்வதும், அதன் உயிர் பலிகள் ஏற்படுவதும் அடிக்கடி நிகழும்.

சகோதரத்துவம்
ஆனால், கத்தாரில் அது நடக்கவில்லை. உலகக்கோப்பையில் வென்ற அர்ஜெண்டினாவின் ரசிகர்கள், தோல்வியை தழுவி ஆங்காங்கே உடைந்து அழுதுகொண்டிருந்த பிரான்ஸ் ரசிகர்களை தேற்றி ஆறுதல் தெரிவித்தனர். இப்படி கத்தார் உலகக்கோப்பை தொடர் மகிழ்ச்சியோடும், பல்வேறு உணர்வுகளோடும், சகோதரத்துவத்தோடும் நிறைவடைந்து இருக்கிறது.

வாழ்நாள் அனுபவம்
கத்தார் உலகக்கோப்பை உள்நாட்டு மக்களுக்கும், பல வெளிநாட்டு ரசிகர்களுக்கும் வாழ்நாள் அனுபவமாகவே மாறி இருக்கிறது. கத்தாரின் சூழல், கலாச்சாரம், அந்த நாட்டு மக்கள் காட்டிய அன்பு, உபசரிப்பால் தாங்கள் ஈர்க்கப்பட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பயணத்தில் கத்தாரை பற்றி தான் அதிகம் கற்றுக்கொண்டதாக ரொசாரியோவை சேர்ந்த மடியோ பெரெஸ் கூறி உள்ளார்.

கலாச்சார பயணம்
"சூப்பர் 16 பிரிவில் அர்ஜெண்டினா விளையாடும் போட்டியை பார்க்க கத்தாருக்கு வந்தேன். அதே சமயம் நான் இந்த நாட்டின் கலாச்சாரம், வரலாறு மற்றும் உணவு முறை பற்றி தெரிந்துகொள்வதற்காகவே அதிக நேரம் செலவழித்தேன். ஓய்வு நேரத்தில் தேசிய அருங்காட்சியகத்தில் நான் அதிக நேரம் செலவழித்தேன். என்னுடைய இந்த கால்பந்து யாத்திரை, கலாச்சார பயணமாக மாறிவிட்டது.

கத்தாரை நேசித்த ரசிகர்கள்
இது எனக்கு விழிப்புணர்வாக அமைந்துவிட்டது. கத்தாரை நேசிக்க தொடங்கிவிட்டேன். மீண்டும் எனது தாயகத்துக்கு செல்ல அச்சமாக உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர், கத்தாரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதால் இந்த பயணத்தை ரத்து செய்ய சொன்னார். எனக்கு தொடக்கத்தில் அச்சம் இருந்தது. ஆனால், அவர் சொன்னது முட்டாள்தனம் என்பதை நான் இப்போது உணர்கிறேன்." என்றார்.

கனவு உலகம்
கத்தார் மக்களுக்கும் இந்த ஒரு மாத காலம் கனவு உலகத்தில் வாழ்வதை போன்ற உணர்வு இருந்தது. எங்கு திரும்பினாலும் உலகின் பல நாட்டு மக்களின் முகங்கள், பல மொழி பேசும் மக்கள், உலகின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் ஒரே இடத்தில் மக்கள் பார்த்தனர். பூங்காக்கள், மெட்ரோ ரயில்நிலையங்கள், சாலைகள், விமான நிலையங்கள் என அனைத்தும் பிசியாக இருந்தன.

பன்னாட்டு ரசிகர்கள்
வெறும் 30 லட்சம் உள்நாட்டு மக்கள் தொகையை கொண்ட குட்டி நாடான கத்தார் மிகப்பெரிய சுற்றுலா தலமாக அறியப்படாத நிலையில் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை, கேமரூன் முதல் கோஸ்டா ரிகா வரை, மொராக்கோ முதல் மெக்சிகோ வரை அனைத்து நாடுகளின் மக்களும் கத்தாரில் திரண்டு இருந்தனர். ஆனால், இனி கத்தார் மக்களால் இதை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

வெறிச்சோடிய கத்தார்
கால்பந்து தொடர்ந்து முடிந்த கையோடு பல நாட்டவர்களும் கத்தாரிலிருந்து தாய்நாடு நோக்கி புறப்பட்டனர். கால்பந்து ரசிகர்களால் நிறைந்து இருந்த விளையாட்டு பூங்காவும் வெறிச்சோடி காணப்படுகின்றன. உலக கால்பந்து ரசிகர்கள் இல்லாமல் கத்தார் திங்கட்கிழமையே வெறிச்சோடி காணப்படுகிறது. கால்பந்து வீரர்கள், ரசிகர்களை அந்நாட்டு ரசிகர்கள் பெரியளவில் தேடுவார்கள் என்பதே உண்மை. இதுபோன்ற ஒரு தருணம் கத்தாரில் மீண்டும் எப்போது ஏற்படும்? என்பது சந்தேகம்தான்.
-
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications