For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7000 மைல் தூரம் ஓடியும் விடாமல் துரத்திப் பிடித்த புடின்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: இகோர் மற்றும் இரினா பிட்கோவ் தம்பதியினரின் வாழ்க்கை மிகச் சோகமானது. ரஷ்ய அதிபர் விலாடிமின் புடினின் பிடியிலிருந்து தப்ப நினைத்து பல ஆயிரம் மைல்கள் ஓடியும் கூட அவர்களால் தப்ப முடியாமல் போனது சோகம்தான்.

கெளதமாலாவுக்குத் தப்பிச் சென்ற அவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்த நிலையில் கைது செய்யப்பட்டு தற்போது ரஷ்யவுக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.

இகோர், பிட்கோவ் மற்றும் அவர்களது 25 வயது மகள் அனஸ்தஸியா ஆகியோர் கடந்த ஜனவரி 15ம் தேதி கெளதமாலா போலீஸாரால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை ரஷ்யாவுக்கு நாடு கடத்தவுள்ளது கெளதமாலா போலீஸ்.

Ran 7,000 Miles. Putin Still Got Them.

வேறு பெயர்களில்...

ரஷ்யாவிலிருந்து தப்பி வந்த இவர்கள் வேறு பெயர்களில் கெளதாமாலாவில் கடந்த 7 வருடமாக வாழ்ந்து வந்தனர். ஆனாலும் கடந்த ஜனவரி மாதம் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இகோர், இரினா மீது ரஷ்யாவில் நித முறைகேடுகள், வங்கியில் நிதி முறைகேடு செய்தது உள்பட கடுமையான புகார்கள், வழக்குகள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்குகள் என்பது இகோர், இரினிவின் வாதமாகும்.

திருடர்கள்...

ரஷ்ய மீடியாக்கள் இவர்களை திருடர்கள் என வர்ணிக்கின்றன. ஆனால் இவர்களோ புடினின் 13 ஆண்டு கால நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி ரஷ்யர்களில் தாங்களும் அடக்கம் என குமுறுகிறார்கள்.

தப்ப முயற்சி...

புடின் நிர்வாகத்தை கேள்வி கேட்ட பலரின் நிலைமை இப்படித்தான் உள்ளது. எங்களைப் போல பலரும் நாட்டை விட்டு தப்பத் துடித்துக் கொண்டுள்ளனர் என்கிறார்கள்.

உடல்நலக்குறைபாடு...

இகோர் உடல் நலக்குறைபாட்டால் தற்போது மருத்துவமனையில் உள்ளார். அனஸ்தஸியாவுக்கு நரம்பியல் பிரச்சினை. இவரது உடல் நலம் மோசமானதைத் தொடர்ந்து தன் மகளுடன் நாட்டை விட்டு வெளியேறினர் இகோரும், இரினாவும்.

மர நிறுவனம்...

1993ம் ஆண்டு இகோரும், இரினாவும் லெஸின்வெஸ்ட் என்ற மர நிறுவனத்தை ஆரம்பித்தனர். சோவியத் யூனியனின் வீழச்சியில் சிக்கி ரஷ்யா தவித்துக் கொண்டிருந்த சமயம் அது. பல நிறுவனங்கள் திவாலாகியிருந்தது.

வர்த்தகம் உயர்வு...

ஆனால் இகோர், இரினா தம்பதியினர் புத்திசாலித்தனமாக வர்த்தகம் செய்ததால் 1996 ஆண்டு இறுதியில் அவர்களின் வர்த்தகம் 100 மில்லியன் டாலராக இருந்தது. பின்னர் அத்தம்பதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு இடம் பெயர்ந்தனர். இகோர் நிறுவனத்தின் இயக்குநரானார். இரினா போர்டு சேர்மன் ஆனார்.

அரசுக் கடன்...

மேலும் ஒரு பழைய பேப்பர் நிறுவனத்தையும் விலைக்கு வாங்கினார். ரஷ்யா - பின்லாந்து எல்லைப் பகுதியில் இது இருந்தது. 1999ல் மேலும் ஒரு நிறுவனத்தையும் வாங்கினர். தங்களது நி்றுவன வளர்ச்சி்க்காக ரஷ்ய அரசின் ஸ்பெர்பாங்க்கிலிருந்து 450 மில்லியன் ரூபிள் கடன் வாங்கினர். இதேபோல மேலும் 2 அரசு வங்கிகளிடம் அவர்கள் கடன் வாங்கினர். வாங்கிய கடனைச் சரியாக திருப்பிச் செலுத்துவதில் சரியாக இருந்துள்ளனர்.

பிரச்சினை...

முதல் பத்து வருடங்கள் பிரச்சினையில்லாமல் சென்றுள்ளது. ஆனால் 2003ல் நிலைமை மாறியது. அரசு அதிகாரிகள் சிலர் அவர்களை அணுகி, ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு ஆதரவாக சில தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு இகோர், இரினா தம்பதியினர் மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து பிரச்சினை உருவாகியுள்ளது.

கடத்தல்...

மேலும் கட்சியில் சேருமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இருவரும் மறுத்துள்ளனர். இதையடுத்து அவர்களது 16 வயது மகள் அனஸ்தஸியா கடத்தப்பட்டார். 3 நாட்களாகியும் திரும்பவில்லை. போலீஸார் உதவ முன் வரவில்லை. இந்த நிலையில் 2 லட்சம்டாலர் பணம் கேட்டு மிரட்டல் வந்தது. பணத்தைக் கொடுத்து மகளை மீட்டனர்.

பலாத்காரம்...

திரும்பி வந்த மகள், கடத்தல்காரர்களால் பவவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் பிறகு அவருக்கு நரம்பியல் பிரச்சினை வந்துள்ளது. எல்லாப் பிரச்சினைகளுக்குநம் அரசியல்வாதிகளே காரணம் எனத் தெரிய வந்தது .

கைது...

இகோரும், இரினாவும் நாட்டை விட்டு வெளியேறினர். முதலில் இஸ்ரேல் சென்றனர். பின்னர் இங்கிலாந்து போனாரக்ள். கடைசியாக கெளதமாலா வந்து சேர்ந்தனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவின் தூண்டுதலின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.

கடும் குற்றச்சாட்டுகள்...

இவர்கள் ரஷ்ய அரசு மீதும், புடின் நிர்வாகம் மீதும் கூறும் புகார்கள் மிகக் கடுமையானதாக இருக்கிறது. இவர்கள் சொல்வது உண்மையா என்பதும் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இவர்களுக்கு ரஷ்யாவில் மிகக் கடுமையான எதிர்காலம் காத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.

English summary
Igor and Irina Bitkov thought they were safe in Guatemala. The Russian couple had passed seven happy years with new lives and new identities in Central America, convinced that their troubles were well behind them. Igor and Irina Bitkov spoke exclusively to The Daily Beast via Skype from a hospital in Guatemala where they’re being kept under 24-hour prison guard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X