பாகிஸ்தானில் பயங்கரம்: இந்து சடலத்தை இடுகாட்டில் இருந்து தோண்டி வெளியே வீசிய மர்ம கும்பல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முஸ்லீம்களின் இடுகாட்டில் புதைக்கப் பட்ட இந்து மனிதர் ஒருவரின் சடலத்தை மர்ம கும்பல் ஒன்று தோண்டி வெளியே வீசியதால் அப்பகுதியில் மதக் கலவரம் தோன்றும் அபாயம் நிலவுகிறது.

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வாழ்ந்த இந்து தலித் சமுதாயத்தை சேர்ந்த புரோ பீல் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக பலியானார். அதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை, அவரது உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

அடுத்து சில மணி நேரத்திற்குள், புரோ பீல் உடல் அடக்கம் செய்யப்பட்ட தகவல் அறிந்த மர்ம கும்பல் ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. ‘கடவுள் மிகவும் உயர்ந்தவர்' என உரக்க சத்தமிட்ட படியே வெறித்தனமாக புரோபீல் புதைக்கப் பட்ட இடத்தை தோண்ட ஆரம்பித்துள்ளது அக்கும்பல்.

பின்னர், முஸ்லிம்களின் இடுகாட்டில் இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தபடியே, புரோபீலின் உடலை வெளியே வீசி விட்டுச் சென்றது மர்மக் கும்பல். புரோ பீலின் உடலை நெருங்கினால் தங்களுக்கும் ஆபத்து என் அஞ்சிய பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.

கிட்டத்தட்ட 8 மணி நேரமாக திறந்த வெளியில் சடலம் கிடந்துள்ளது. அதற்குள் இது குறித்து தகவல் அறிந்த புரோ பீலின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஒரு இடத்தில் புதைக்கப் பட்ட சடலத்தை மாற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்வது அபசகுணம் என எண்ணிய உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

பின்னர் உள்ளூர் நிலச்சுவான்தார் ஒருவர் தனது நிலத்தில் அந்த உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கிய பின்னர் அங்கு நிலைமை சீரானது. ஆனாலும், அப்பகுதி முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் இது குறித்து பிரச்சினை வெடிக்கலாம் என கருதிய போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+